பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதப் போர்

163

வேதவியாசர் காலத்திற்கு நெடுங்காலத்திற்கு முன்பு தோன்றியவர்களாதல் வேண்டும்.

3. ஒரே சமயம், ஒன்றுக்கு மேற்பட்ட பூனுால் என்றும் அணிந்ததில்லை. இரண்டு, அல்லது மூன்று புரிகள் அணிவது பிற்கால வழக்கமாம்.

4. வேதகால வழக்கங்களாம், பூப்பு நாள் கழித்துத் திருமணம் கொள்வது, நான்காம் நாளன்று, மணச்சடங்கை நிறைவு கொள்வது போன்றவற்றை விடாது காப்பாற்றி வருகின்றனர்.

5. ஸ்ரார்த்தம், ஒருவன் இறந்த நட்சத்திரத்தில் செய்யப்படுகிறது. இறந்த திதியில் செய்யப்படுவதில்லை.

இந்த விவாதங்களிலிருந்து, தன் மனைவியாக, அர்ச்சுனன் ஏற்றுக் கொண்ட உலூபி, ஒரு மலபார் கன்னியாம் என நாம் முடிவுகொள்ளலாம்.

அகஸ்தியர்கள் :

மகாபாரத காலத்திற்கு முன்பே, இந்தியத் தீபகற்பத்தின் தென்கோடி வரை அகஸ்தியர்கள் பரவி வாழ்ந்திருந்தனர். பல்வேறு அகஸ்தியர்கள், பல்வேறு இடங்களில், பல்வேறு காலங்களில் வாழ்ந்திருந்தாலும் புராணங்களில் உள்ளது போலவே, பாரத வீரகாவியத்திலும், எல்லா அகஸ்தியர்களையும் ஒர் அகஸ்திய முனியாகவே கொண்டுபேசப்பட்டுளது. மகாபாரதம், பஞ்சவடியில், பழைய அகஸ்திய ஆஸ்ரமம் ஒன்றைக் குறிப்பிடுகிறது. (மகாபாரதம் 3:99:8632) கடல் இடையே சவூபத்ரா எனுமிடத்தில், அகஸ்திய துறவி மடம் ஒன்றையும் அது குறிப்பிடுகிறது. ஐந்து நார் தீர்த்தங்களில் ஒன்றாகப், பாண்டிய நாட்டைச் சேர்ந்த அகஸ்திய தீர்த்தம் ஒன்றையும் குறிப்பிடுகிறது. (மகாபாரதம்: 1 : 2 1 6 4 6 , 217, 78-77) இவற்றில் இறுதியாகக் குறிப்பிடுவது, தமிழ்மரபுவழிச் செய்திகளின்படி தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு, அகஸ்தியர் தம்முடைய நிலையான உறைவிடமாக