பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.மு. இரண்டாம் ... வாணிகம்

169

களிலிருந்தே, அவ்விடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. லவங்கம், மலபாரிலும், சீனாவிலும் வளர்கிறது. ஆனால், அதை மேலை நாடுகளுக்குக் கொண்டு சென்ற அராபிய வணிகர்கள், அதன் ஆப்பிரிக்கப் பிறப்புப் பொய்க் கவிதை களைக் கட்டி வளரவிட்டனர். “தெளிவற்ற தன்மையிலும் அறிவுறுத்தும் பகுதி, பிளைனி அவர்களின் எழுத்தில் உளது. அவருடைய காலத்தில், மக்களின் பேராதரவு பெற்றிருந்த ஒருவகை லவங்கம் குறித்துத், தோம்னா (Thomna)வைத் தலைநகராகக் கொண்டிருந்த அராபியர்களின் அரசன். கெப்னிடே (Kefianiatac) என்பான், அரச ஆணை அல்லது பொது ஏலம் மூலம் விற்பனையை ஒழுங்குபடுத்தும், முழுக் கட்டுப்பாட்டுரிமையை ஒரு காலத்தில் பெற்றிருந்தான் என்றும் , அம்மரங்கள், ஆட்சியிலிருப்போரின் கொடுஞ் செயல் துணையாலோ, அல்லது வெறும் எதிர்பாராச் சூழலாலோ, அறுதியிட்டுச் சொல்ல இயலா நிலையில், கொடிய காட்டு மனிதர்களால் எரிக்கப்பட்டுப் பெற்ற ஒரு பவுண்டு நிறையுள்ள அம்மரத்தின் சாறு, “டெனாரி” [Denari] என வழங்கும் ஆயிரம் உரோம வெள்ளி நாணயம் வரை, சில சமயம் ஆயிரத்து ஐந்நூறு நாணயம் வரையும் வினை போயிற்று என்றும் திருவாளர் பிளைனி அவர்கள் கூறுகிறார். திருவாளர் பிளைனி அவர்கள் அளிக்கும் அகச் சான்றுகளில் சில அத்தகைய பேரழிவுக்கு, லவங்கத் தோட்டம் திப்பிடித்துக் கொள்ளுமளவு தென்றல் காற்று. கடுமையாக வீசுவதைக் காரணம் காட்டுகின்றன. ஈண்டு இரண்டு செய்திகளைக் குறிப்பிட வேண்டும். முதலாவதாக, அரேபிய ஆட்சியாளர்கள், லவங்க் வாணிகத்தின் மீது கொண்டிருந்த கடுமையான கட்டுப்பாடு ; இரண்டாவதாக, லவங்கம் வழங்குவதில் ஏற்பட்டுவிட்ட தோல்விக்கு, உண்மையான காரணத்திற்குப் பதிலாக உதாரணத்திற்கு, இந்தியப் பகுதியிலிருந்து வரும் கடற்பயணத்தின் போது அனுபவித்த, பேரழிவு விளைவித்துவிட்ட கொடுங்காற்று போலும் உண்மையான காரணத்திற்குப் பதிலாக, உள்நாட்டுக் காரணம் கற்பித்து, வாதிடும் தவறான விளக்கம். லவங்கம் கிடைக்கக்