பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.மு. இரண்டாம் . . . வாணிகம்

171

கொண்ட நல்லெண்ணெய் ஆகும். திருநெய்யாட்டு என்பது, அரசர்களும், மத குருக்களும் மேற்கொண்ட ஒரு விழா. நறுமணத் தைலம் காய்ச்சுவதற்கும் எண்ணெய் தேவைப்பட்டது. நறுமணத் தைலம் செய்யப்படும் தொழிற்சாலைகள், எகிப்திலும் சிரியாவிலும் இருந்தன. தானியங்கள் என்பதில் அரிசி, பெரும் சோளம், சோணை மூடிய தினை ஆகியன பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும். அட்ஸேபுஷ்ட் (Hatshe pust) அரசியாரின் படையெடுப்பும், புண்ட்நாட்டி விருந்து கருங்காலியைக் கொண்டு வந்தது. இந்தியப் பண்டங்கள், இந்தியாவிலிருந்து காலம் தவறாமல் முறையாக எடுத்துச்செல்லப்பட்ட இடம் புண்ட் நாடாகவே, அரசியார், மலபார் காடுகளில் வளர்ந்த நேர்த்தி வாய்ந்த கருங்காலியைப் பெற்றுக்கொண்டதற்குப் பெரிய வாய்ப்பு இருந்தது. [Scoff's periplus : page: 153]

பாலஸ்தீனத்துடனான வாணிகம்: கி. மு. இரண்டாம் ஆயிரத்தாண்டு முடிவதற்குச் சிறிது முன்னர், எபிரேயர்கள், எகிப்தில் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுப், பாலஸ்தீனத்திற்குக் குடிபெயர்ந்து விட்டனர். அவர்களோடு சென்ற இனிய மனப்பொருள்கள், புனிதத் தன்மை வாய்ந்தனவாக மதிக்கப்பட்டன. இஸ்ரேல் அரசின் தோற்றத்தில், வளம் கொழிக்கும் வாணிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது. ஆகவே அரேபிய வாணிகர்களால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட லவங்கம், எபிரேய மத குருக்களின் புனித திருநெய்யாட்டு எண்ணெய்யின் கலவைப் பொருள்களுள் ஒன்றாகிவிட்டது என்பதை அறிகிறோம், (Exod, XXX) நீலமணிக்கல்லும் இந்தியாவிலிருந்தே கொள்முதல் செய்யப்பட்டது என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டுளது. இந்தியாவிலிருந்து எகிப்து பெற்ற அனைத்துப் பண்டங்களும், பாலஸ்தீனத்திலும் இறக்கு மதி செய்யப்பட்டன எனச் சிரமமின்றி முடிவு செய்து கொள்ளலாம்;