பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

20. சிலப்பதிகாரம் 'வஞ்சிக்காண்டத்துச் செங்குட்டுவன் வேறு; பரணர் பாடிய, பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தின் செங்குட்டுவன் வேறு; (பக்கம் : 599-600)

21. கங்கைக்கு அப்பால் உள்ள எண்ணற்ற அரசர்களோடு போரிடுவதற்குத் தேவைப்படும் அத்தனைப் படையை வழிநடத்திச் செல்வது என்பது, இந்திய நாட்டின் நில இயல் கூறுபாடு பற்றி ஏதும் அறியா ஒரு தமிழ்ப் புலவரால் மட்டுமே கற்பனை செய்து பார்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியாம். இவை அனைத்தும் வெறும் பாட்டிக் கதைகளே ஆதல் வேண்டும்.

All these must be fables, because the transport of an army of the size necessary for the purpose of fighting with the Trans. * Gangetic monarchs is a thing that can be imagined only by a “Tamil Poet ignorant of the geography of India. page:601

22. பரணரோ, அவர் காலப் புலவர்களோ, வேங்கட மலை மீது கோயில்கொண்டிருக்கும் திருமாலின் நின்ற கோலம் புகழ் பெற்றுவிட்ட நிலையில் அதைக் குறிப்பிடாமல் விடமாட்டார்கள். ஆகவே, சிலப்பதிகார ஆசிரியர், பரணருக்கு மிகமிகப் பிற்பட்ட காலத்தவராவர்.

Neither paranar, nor others of his real contemporaries describe Vengadam as having the famous temple on its top, a fact which no one singing of Vengadam after the temple had become famous could omit to mention. Hence the author of Silappadigaram must have been a much later person than „poranar. page : 605

23. இரண்டாம் காண்ட இறுதியில் கணவனும், மனைவியும், மண்ணுலகைவிட்டே போய்விடுகின்றனர். சிலம்பின் கதையும் முடிந்துவிடுகிறது.

”At the end of the Il Canto the hero and heroine deportfrom the earth and the story of the anklet ends” page : 597