பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

தமிழர் வரலாறு

(ஆகமம் பற்றிக் கூறும் போது, அச்சொல் உணர்த்தும் பல பொருள்களுள், ‘’ஆப்தவசனம்‘’ அதாவது, முற்றும் உணர்ந்த பெரியோர்களின் மெய்யுரை என்பதும் ஒன்று என்பதையும், அதிலிருந்தே, ஆகமம் என்பதன் மற்றொரு பொருள் உருப்பெற்றது என்பதையும் ‘’ஆப்தவசனங்களில்", மிகப்பெரியது அல்லது மிகச் சிறந்தது. வேதம் ஆதலின், அவ்வேதமும் சில சமயம் ஆகமம் என அழைக்கப்படும் என்பதையும் நான் மறந்து விடவில்லை. உண்மையில், ‘’ஆகமம்‘’ என்ற சொல், பழைமையிலிருந்து வந்தது எனும் பொருள் உடையதாகும். ஆனால், ஆகமம் என்பது, சிவ. விஷ்ணு, சக்தி வழிபாட்டு நெறிகளை உணர்த்தும் புத்தகங்களாகிய ‘’தந்திரம்‘’ என்பதன் பெயர்களை உணர்த்தும் உண்மைப்பெயராகும். இப்பொருள்நிலையில், ஆகம நெறி வழிபாடுகள், வேதங்ளோடு வேறுபட்டனவாம்: பெளத்தர்கள், ஜைனர்களின் சமயக் கருத்துக்களும் பழைமையாகவே வருவன ஆதலின், அவையும் ஆகமங்கள் என்றே அழைக்கப்படும். இவ்வாகமங்கள் அனைத்தும் அவற்றின் தொடக்க நிலையில், வேதங்களுக்கு அதாவது ‘’கர்ம காண்டங்‘’களுக்கு எதிரிகளாம். சைவ ஆகமநெறி‘’ மகேஸ்வர நெறி, ‘’பாசுபத‘’ நெறி எனவும் வழங்கப்படும். வைஷ்ணவ ஆகமநெறி, ‘’பாகவதம்‘’ என்றும் (அதாவது இறை சார்புடைய) 'சாத்தவதம் என்றும் {சாத்தவத அரசியல் குடும்பத்தவரே, அவர்களைப் பெரும்பாலும் முதன் முதலில் ஆதரித்தமையால்), "பாஞ்சராத்ரம்' என்றும், வழங்கப்படும். இறுதியில் கூறிய இச்சொல், வேறு ஒரு .பொருளையும் குறிக்கும். அது விஷ்ணுவின் திருமேனியை வழிபடும் சிறப்பு வழிபாட்டு நெறியை உணர்த்தி, அப்பொருள் உ ண ர் த் து ம் வகையால், - ‘’வைகானஸர்"கள் பின்பற்றும் வழிபாட்டு நெறியோடு முரண்படுவதுமாம், குறிப்பிட்ட ஒரு வழிபாட்டு நெறியை உணர்த்தப் பயன்படுவதோடு, ‘‘வைகானஸர் எனும் இச்சொல், காடு சென்று வாழும் சந்நியாசிகளையும், பொதுவாகக் குறிக்கும்] ஆகம வழிபாட்டு நெறிகள், வைதீக வழி