பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகமங்களின் தோற்றம்

183

அதன் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. மேலும், யோகப்பயிற்சி,சந்நியாச வாழ்க்கையில் எளிதில் மேற்கொள்ளக்கூடியதாயிற்று.

வைதீக நெறியாளர்க்கும் ஆகம கெறியாளர்க்கும் இடையிலான போட்டி :-

பண்டை நாட்களில், வைதீக நெறியாளர்களுக்கும், ஆகம் நெறியாளர்க்கும் இடையில் பெரும்பகை - கடும்பகை - நிலவி இருந்தது. ஆகமநெறியாளர்கள், கடவுள் பெயரால் இரத்தம் சிந்தப்படுவதை வெளிப்படையாகவே கண்டித்தனர். இறைச்சி உண்பதை , அதிலும் மாட்டிறைச்சி உண்பதை எதிர்த்தனர். இரத்தம் சிந்தும் யாகங்கள் குறித்த அவர் கண்டனங்களின் எதிரொலி, மகாபாரதத்தில் கேட்டது. வைதீக ஆகம நெறிகளின் ஒருங்கிணைந்த அவ்விரு நெறிகளிலும் உள்ள நல்லனவற்றையெல்லாம் தேர்ந்து தன்னகத்தே கொண்ட ஒரு நெறியினைப் பின்பற்றத்தொடங்கியமக்களால், பிற்காலத்தில் மேற் கொள்ளப்பட்ட யாகங்களில், உயிருடைக் கால் நடைகளுக்குப் பதிலாக, மாவினால் செய்யப்பட்ட, அவற்றின் வடிவங்களை ('பிஷ்டபஷு") மாற்றுப் பொருளாக ஏற்கும் நிலைக்கும் கொண்டுவந்துவிட்டது. பகவத்கீதை, தொடக்கத்தில், ஆகமநெறியாளரின் ஒரு பிரிவினராகிய பாகவதர்களின் சமய நூல்தொகுப்போடும், ஸ்ரீ கிருஷ்ணன், பாகவதர்களின் பக்தி நெறியை, வேதாந்திகளின் ஞானநெறி, சாங்கியர்களின், தனிமிகு நுட்பம் வாய்ந்த இயல்கடந்த ஆய்வு நெறிகளோடு ஒருங்கு இணைத்து, வேறுவேறுபடும் இந்நெறிகள் எல்லாம், ஒரே உண்மைப் பொருளின் பல்வேறு கோணங்களாகத் தோன்றும், உயர்ந்த நிலையிலிருந்து பேசத் தொடங்கி, அறிவெல்லை. கடந்த இப்பேருண்மையை அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்தான். என்றாலும், பகவத் கீதை, வேதத்தை, அதாவ்து கர்மகாண்டத்தை மிகமிகக் கடுமையான சொற்களால், தூற்றிக் கண்டிக்கும் நிலையில், தன்னுடைய ஆகம நெறி, இயல்பை வேண்டுமளவு. இன்னமும் பெற்றுளது. "ஓ பார்த்தா! வேதங்கள் பற்றிய வாதங்களில் மகிழ்ச்சி