பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

தமிழர் வரலாறு

காணும், அறிவிலிகள், அணிநயம் கலந்த இவ்வினிய சொற்களைக் கூறுகின்றனர். “கர்ம பாதையைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை, அவர்களின் உள்ளம் ஆசைகளால் நிரம்பி வழிகிறது. அவர்கள் ஸ்வர்க்கத்தில் அனுபவிக்கப்போகும் இன்பத்திற்காக ஏங்கி நிற்கின்றனர். அவர்கள், மறு பிறவியை எது தருமோ, அதிலும், கர்மத்தின் பயனிலும், எண்ணற்ற சடங்குகளைக் கொண்டுள்ள விழாநிகழ்ச்சிகளிலும், குறியாக நிற்கின்றனர்; இன்ப நுகர்வு அதிகார ஆணை நெறிகளைப் பின்பற்றுகின்றனர். இன்ப நுகர்வுக்கும், அதிகார போதைக்கும் அடிமைப்பட்டுப்போன உள்ளத்தோடு, இன்ப நுகர்விலும், அதிகார போதையிலும் ஈடுபாடு கொண்டுவிடும் அவர்களின் புத்தி, அவர்களுக்குச் சிறிதே அறிவினைத் தருமாயினும், அமைதியான தியானத்தில் நிலையாக நிற்காது. வேதம், மூன்று குணங்களால் உருவான பொருள்களைப் பற்றிக் கூறுகிறது. ஆனால், “அர்ஜ்ஜுனா! அம் முக்குணங்களால் உருவாகும் பொருள்களுக்கு அப்பாற் பட்டவனாக இருப்பாயாக”. இவையல்லாமல், ஆகமங்களுக்கே உரியவாய எண்ணற்ற சொற்கள் பகவத்கீதையில் இடம்பெற்றுள்ளன.

“யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த அவிபஷ்கிதஹ
வேதவாத ரத்ஹாஹ பார்த்த! நான்யத் அஸ்திதி
வாதிஹை
காமரத் மாஹ ஸ்வர்க்க பராஹ ஜன்மகர்ம பஹல
பிரதாம்
கிரியாவிஸேஷ பஹுலாம் போகைஸ்வரிய பஹலம்ப்ரதி
போகைஸ்வர்ய ப்ரஸ்க்தனாம் தயா அப்ஹ்ருத செதஸாம்
வ்யவ ளாயாத்மிகா புத்திஹி சமாதெளன விதியதெ
த்ரைகுண்ய விஷ்யா வேதா நிஸ்த்ரை குண்யொ
பவராஜுலர்”

-பகவத் கீதை : 2 : 42-45)

வைதீகர்கள், இதற்கு மாறாக, ஆகம வழிபாட்டினரை தனிமிக இழிந்தவராகவே மதித்தனர். இது பண்டை