பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகமங்களின் தோற்றம்

189

உணர்விலேயே வாழ்ந்துவிடவல்ல உள்ளம் வாய்க்கப்பெற்ற, அறிவார்ந்த உணர்ச்சியினராகிய மக்கள், எக்காலத்தும் ஒரு சிலரே. அம்மக்களுக்குப் பத்தி மார்க்கம் மீதான கவர்ச்சி பிராமணர்களின் கருத்தைப் பக்திவழியில் திருப்பியதற்கான மற்றொரு காரணக் கூறு ஆதல்வேண்டும். அப்பிராமணர்கள், திரிமூர்த்திக் கொள்கையை, தாங்கிய சமயக் கொள்கையாம் உலகப்பருப்பொருளின் முக்குணக் கொள்கையோடு ஒன்று படுத்திட உருவாக்கினர். விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களுக்கும், சிவனின் எண்ணற்ற, ஆனால் தற்காலிக மானிட இயல்பு காட்டும் திருவிளையாடல்களுக்கும் உருவம் கொடுத்து வளர்த்தனர். (பாகவத புராணம் குறைந்தது 22 அவதாரங்களைக் குறிப்பிடுகிறது) (பிரம்மாவின் செயல் பாட்டுத் திறன், படைப்புத் தொழிலோடு தீர்ந்துவிடுவதால், அவன் உயிர்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்ல இயலான் ஆகவே, ஆகமங்கள், அவனை இருட்டடிப்புச் செய்துவிட்டன. அப்பிராமணர்கள், 108 வைஷ்ணவ. ஆகமங்களையும், 28 சைவ ஆகமங்களையும் இயற்றினர். 77 ஆகமங்களைக் கொண்டிருப்பதாய்ப் பெருமை சாற்றிக் கொள்ளும், சக்திக்கு உரியதான பிறிதொரு ஆகம நெறி பிற்காலத்தே வளர்ச்சி பெற்றது. இக்காலங்களில், ஒவ வழிபாடும், கிருஷ்ண வழிபாடும் வழக்காற்றில் இருந்தன. என்பதற்குப் பாணினியும் சான்று பகர்கின்றார்.

பையப்பைய, வேதாந்த நெறியும், ஆகம நெறியும், ஒன்றையொன்று ஈர்க்கத் தொடங்கின. புராணங்களில் அவை, அடுத் தடுத்து இடம் பெற்றுள்ளன. ஆனால், இரண்டறக் கலந்து ஒன்றாகிவிடவில்லை. சங்கராச்சாரியார் காலத்திலும் (கி. மு. 8 ஆம் நூற்றாண்டு) அவை, விடவில்லை என்பதை நாம் அறிகிறோம். வேதாந்த சூத்திரங்களை விளக்கிக்கூறும் நிலையில், பாசுபத சமய நெறியும், பாஞ்சராத்ர சமய நெறியும் ஒன்றோடொன்று முரண்பட்டவை. எனக் கூறுவதில், அவர் பாத்ராயணரைப் பின்பற்றுகிறார் என்றாலும், அவருடைய "பிரபஞ்ச ஹர்தயம்" என்ற நூல். உண்மையான ஆகம நூலே ஆகும்.