பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

தமிழர் வரலாறு

செவிவழிச் செய்திப்படி, விஷ்ணு, சிவன் சக்தி, கணபதி, சுப்பிரமணியர், சூரியன் ஆகியோர் வழிபாட்டு நெறிகளை முறைப்படுத்தினார். அவற்றிடையே, தாம் கண்டு நிறுவிய மதங்கள் பின்பற்றும் வழிபாட்டு முறையினைப் புகுத்தினார் என்ற காரணங்களால், அவர் "ஷண்மத ஸ்தாபனா சாரியர்" ..(அறுவகை மதங்களைக் கண்ட ஆசிரியர்) எனவும் அழைக்கப் பட்டார். இவ்வகையால், தம்முடைய வேதாந்த நூல் களையும், ஆகம நூல்களையும், ஒன்றோடொன்று கலக்க விடாது வேறுபடுத்தியே அவர் வைத்திருந்தார் என்பதைக் காண்கிறோம். .போதுவாக, "விஸிஷ்ட்ஹாத்வைத வேதாந்தம்" என அழைக்கப்படும் வைஷ்ணவ வேதாந்த நெறியைத் தோற்றுவித்த யாமுனாச்சாரியர்தாம், வைஷ்ணவத் தலைமைக்கு, (ப்ராமாண்யம்) அதாவது, வேதத்திற்கு நிகரானது, 'சாத்விக ஆகமம்' என்பதற்கு, முதன்முதலில் வாதிட்டவராவர். உண்மையில் இராமானுஜ ஆச்சாரியர்தாம், அவை இரண்டையும் இரண்டற்று ஒன்று பட இணைத்தவராவர். இது, ஆகம நெறிக் கொள்கைகள் தென்னிந்தியாவில் குடிபெயர்ந்ததற்குப் பல்லாண்டு காலத்திற்குப் பின்னரே நிகழ்ந்தது. தென்னிந்தியாவில், அவை எப்பொழுது, எவ்வாறு பரவி யிடங்கொண்டன என்பது பின்னர் ஆராயப்படும்.

ஆரியத்துக்கு முந்திய இந்தியவழிபாட்டு நெறியிலிருந்து முகிழ்த்த ஆகம வழிபாட்டு நெறி, கி. பி. 5, 6 ஆம் நூற்றாண்டுகளில், தென்னிந்தியரின் உள்ளத்தை ஆட்கொள்ளவும், வேதாந்த நெறியோடு இரண்டறக் கலந்து விட்டபோது, மீண்டும் வடஇந்தியாவுக்கே பாய்ந்து சென்று, கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் இந்து சமயமாகவும் விதிக்கப்பட்டுவிட்டது ஆதலின் வடஇந்தியாவில் ஆகம நெறிகளின் வளர்ச்சி குறித்து, இவ்வளவு விரிவாக ஆராய வேண்டியதாயிற்று.