பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

வரலாறு பற்றிய ஒரு வினாத்தாளுக்கு விடையளிக்க வேண்டியிருப்பினும், அம்மாணவர்களில் பலர் “தமிழர் வரலாறு” என்ற திருவாளர் பி. டி. சீனிவாச அயங்காரின் இந்நூலை முழுமையாகப் படிப்பது இல்லை. படித்திருந்தால், தமிழர் வரலாறு பற்றிய உண்மை நிலையை உணர்த்தக்கூடிய வரலாற்றுச் சான்றுகளும் இலக்கிய விளக்கங்களும், இந்நூலாசிரியர்க்கு, முழுமையாகக் கிடைக்காமையால் இடம்பெற்றுவிட்ட இவைபோலும், சில தவறான கருத்துக்களைக் களைந்திருக்க இயலும். ஆனால், அது செய்யாமைக்கு அம்மாணவர்கள் மீது குற்றம் சாட்டுவதும் பொருந்தாது. தமிழர் வரலாறு அறிய மிகப்பெருமளவில் துணைநிற்பதான அந்நூல், தமிழில் இல்லாது, ஆங்கிலத்தில் அமைந்திருப்பது, தமிழ்த்துறை மாணவர்கள், அந்நூலை படிப்பதற்குத் தடையாக இருந்துவிட்டது. அத்தகு இடர்ப்பாட்டிற்கு உள்ளானவர்களுள், நானும் ஒருவன். அதனால், அந்நூல், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவரின், தமிழ், தமிழர் , தமிழ்நாடு, பற்றிய வெளியிடப்பட்டுள்ள மேலே கூறியன போலும், தவறான கருத்துக்கள் அறவே நீக்கப்பட்டு, தமிழர் வரலாற்றை உள்ளது உள்ளவாறு உணர்த்தும் சிறந்த வரலாற்று நூலாம் விழுமிய பெருமையினை இந்நூல் பெற்றுவிடும் என உணர்த்தேன்.

அதையொட்டி, நூலை மொழிபெயர்த்ததோடு நில்லாமல் ஆசிரியரின் தவறான முடிவுகள் சிலவற்றினை ஏற்ற சான்றுகள் காட்டி மறுத்து, அந்தந்த அதிகாரங்களின் பின் இணைப்பாகச் சேர்த்துள்ளேன். நான் விட்டுச்செல்லும் பணியினை, இந்நூலைப் படிக்கும் வரலாற்று மாணவர்கள், தொடர்ந்து முடிப்பார்கள்; முடிக்க வேண்டும் என்பதால் அத்தவறான முடிவுகளைச் சுட்டிக் காட்டுவதோடு விட்டுச் செல்கின்றேன்.

“தமிழர் வரலாறு” என்ற இந்நூலின் ஆசிரியர் கடைப்பிடித்திருக்கும் ஆங்கில மொழிநடை, மிகச் சிறந்த இலக்கிய நலம் வாய்ந்த ஒன்று; அதைத் தமிழில் மொழிபெயர்ப்பது