பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடஇத்தியாவும்....கி. மு. 1000 ... 500 வரை 197 விலங்குகள் (பஞ்ச பஞ்ச நகஹாற) முள்ளம்பன்றி, உடும்பு, முயல், முள்ளெலி, ஆமை, பிளவுபட்ட குளம்புகளைக் கொண்ட ஐந்து விலங்குகள், (த்விகுரிஹை), "நீல்காய்", -புள்ளி இல்லா மான், புள்ளிமான், எருமை, காட்டுப்ப்ன்றி, கால்களால் கிளறித் தின்னும் ஐவகைப் பறவைகள், கௌதாரி பாறைகளில் கூடு கட்டி வாழும் புறா, "கபிஞ்சா" ,"வார்த்ஹராணஸ", மயில், "கஹஸ்ரதம்ஷ்ட்ரீ","சிலி சிம","வர்மி", "ப்ரஹச்சிரஸ்","மஷகரி", "ரொஹிக" மற்றும் "ராஜி" போலும் மீன் வகைகள், ஆகிய இவை உண்ணப்படலாம் எனப் பெளதாயனர் கூறுகிறார். இந்நீண்ட பட்டியலோடு, காண்டாமிருகமும், கருப்பு மறிமானும் எதிர்ப்புக்களிடையே சேர்க்கப்பட்டன. [Baudhayana Dharma Sutras. 1 : 5, 2 : 1 : 8 ] ஆபஸ் தம்பர், தின்னக் கூடாத விலங்குகளின் பட்டியல் ஒன்றைத் தருகிறார். ஆனால், இறைச்சி உண்பது பற்றிய அவர் கொள்கைகள், பால்தரும்பசுக்கள், காளைகள் ஆகியனவும் தின்னப்படலாம் எனக்கூறும் தனியான ஒரு குத்திரத்தைக் கொண்டிருப்பதோடு, மற்ற வகையில், பெளதாயனர் கொள்கையோடு ஒத்துள்ளன. [Apasthamba Dharma sutras 1, 3, 17, 30]"வாஜகனேயர்" அவர்கள், "காளை மாட்டின் இறைச்சி படையலுக்கு உரியது" எனப் பலர் அறிய வெளிப்படுத்திய கருத்தைத், தாம் கூறியதோடு இணைத்துக் கொள்வது பொருந்தும் என ஆபஸ்தம்பாயனர் கருதினார் என்பதிலிருந்து, மாட்டிறைச்சி உண்பதற்கு எதிரான, உணர்வு பூர்வக் கருத்து தென்னாட்டில், தானாகவே கைவிடப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். யாஞ்னவல்கியர், "பசு, காளைகளின் இறைச்சி முதிரா இளமையவாயின், அவற்றை உண்போரில் நானும் ஒருவன் (Sat Brah. 3 : 1, 2, 21) எனக் கூறுகிறார். ஆபஸ்தம்பர் கூற்றுப்படி, இறந்த முன்னோர்களை மகிழ்விக்கவும், செய்வோர்க்குப் பல்வேறு வகையான பலன்களை ஈட்டுவதற்கும், ஸ்ரார்த்தங்கள் ஒவ்வொரு மாதத்திலும், பிற்பகுதியில் செய்யப்படுதல் வேண்டும். அவர்கள், மனநிறைவு. கொள்ளும் காலஅளவு, படைக்கும் இறைச்சியின் வகைக்கேற்ப