பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடஇந்தியாவும் ... கி. மு. 1000 ... 500 வரை 199 கெடுத்து ஓடிற்று. இவ்வழிபாட்டு நெறிகள், சமணர் வழி பாட்டு நெறியோடு போரிட வேண்டியதாயிற்று. சமணத் துறவிகளாம் ஆசிரியர்கள்தாம், சமய உணர்வு வாய்க்கப் பெறாத் , தம் மாணவர்களுக்கு, இறைச்சி உணவினைக் கைவிடுமாறு முதன் முதலில் வற்புறுத்தினர். வைஷ்ணவ, சைவ வழிபாட்டு நெறிகள், இறைச்சி உணவு உண்டலைக் கைவிடாது போனால், சமணவழி பாட்டு நெறிக்கு எதிராக, இருந்து, வெற்றி பெறல் இயலாது. ஆகவே, இறைச்சி உண்ணல், கள் உண்ணல் ஆகியவற்றிலிருந்து ஒதுங்கி நிற்பதைத், தங்களின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்றாக மேற்கொண்டனர். தென் இந்தியாவில் வைஷ்ணவ, சைவ ஆகமங்களின் முதல் ஆசிரியர்களாக விளங்கிய பிராமணர்கள். இறைச்சி உணவினைக் கைவிட்டமைக்கு இதுவே காரணம் என யூகிக்கின்றேன்.

வருணங்கள் :

தென்னிந்திய சூத்ரகாரர்கள் வகுத்த வாழ்க்கைச் சட்டங்களெல்லாம், முக்கியமாக, அக்கால அளவில், தமிழ் நாட்டில் மிகச் சிலராகவும், கோதாவரிப் பள்ளத்தாக்கின் தலைப்பில், மிகப் பலராகவும் வாழ்ந்திருந்த பிராமணர்களைக் குறித்தனவே. அச் சூத்திரங்கள், நான்கு பெருஞ் சாதிகளையும், எண்ணற்ற கலப்புச் சாதிகளையும் குறித்துப் பேசுகின்றன என்றாலும், அவை கூறும் சட்டங்களில், ஏனையோரிலும், பிராமணர் குறித்தே, அவை தாமும், அக்கறை கொண்டுள்ளன. ஆதலின், அவை கூறும் அச்சாதிக் கூறுபாடுகள், வெறும் தத்துவ அளவினவே ஆம், ஆரியர்களின் நால்ஜாதி அமைப்பு (சாதுர் வர்ண்யம்) வேதக லக் தில், ஆரிய வர்த்தத்தில் மட்டுமே நடைமுறையில் இருந்த ஒன்று. மகாபாரதப் போருக்குப் பின்னர், அர்ஜுனன் எதிர்பார்த்தது போல், வட இந்தியாவில் பெரும் சாதிக் குழப்பம் (வர்ணசங்கரம்) நிலை கொண்டுவிட்டது.(பகவத் கீதை : 1. 41-43) தென் இந்தியாவில் சாதுர்வர்ணயம், எக்காலத்தும் கொள்கை அளவில் இருந்ததே அல்லது, என்றும்