பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

தமிழர் வரலாறு

நாகதீபம் என்பது, ஈழம், மலபார் கடற்கரைகளைக் குறிக்க வழங்கப்படும். அத்தீவு யக்கினீக்களால் இலங்கையின் நெருக்கமாக அகப்படுத்தப்பட்டிருந்தது. பழங்குடியினர் பற்றிய பழைய ராமாயணக்கட்டுக் கதைகளின் நினைவுச் சின்னம் இவை என்ற உண்மை ஒருபால் இருக்க, ஒரு பிரிவு மக்கள், இலங்கைக்குப் பயணம் செய்து, ஆங்கு சந்நியாசிகள் ஆயினர். [Hatripala Jataka. 509 : Mugapakka Jataka. 538) சிறிய வில்லாளனாகப் பிறந்த புத்தர் தாமும், தக்கசீலத்தில் வேதங்களைக் கற்றுத் தம் கல்வியை நிறைவு செய்து கொண்டு, வாழ்க்கை அனுபவங்களைப் பெற ஆந்திர நாட்டிற்குச் சென்றார். [Bhima Sena Jataka. 80 ] ஆங்குப் பெற்ற அனுபவம் குறித்து நாம் பொருட்படுத்தவில்லை ; அவருடைய பிறவிகளில் பிறிது ஒன்றில், "சேரி" என்ற நாட்டில் அவர், ஒரு மண்பாண்ட வணிகர் ; அவர் "சேரிவன்" என அழைக்கப்பட்டார். இச் "சேரி", பெரும்பாலும் சேர நாடு ஆம். விலை கூவி விற்கும் வணிகனாக, ஊர் ஊராகச் செல்லும் அவர் பயணத்தில், அவர்

"தெலவாஹ" ஆற்றைக் கடந்து "அந்தபுராவை" அடைந்தார். அந்த அதாவது ஆந்திர நாடு, சேர நாட்டிலிருந்து வெகுதொலைவில் இல்லை. (சேரிவாண்ய ஜாடகா எண் : 3)

போதிசத்தரின் பிறிதொரு அவதாரத்தில், அவர் பிராமண :"மகாகால"ரின் மகன் "அகித்தி" ஆகப் பிறந்தார். அவர் துறவியாக மாறி உடன் பிறந்தவளான "யசவதி" என்பாளுடன் பெனாரஸிலிருந்து பத்துக்கல் தொலைவில் உள்ள ஓரிடத்திற்குப் போய்விட்டார். ஆனால், அவர்மீது அன்புகாட்டுவாரின் அன்புத் தொல்லைகளிலிருந்து விடுபட, அவ்விடத்தை அவராகவே விடுத்து, "தமிலா" நாட்டை அடைந்து, காவேரி பட்டணத்திற்கு அருகில் இருந்த, ஒரு மலர்த்தோட்டத்தில் (உய்யானம்) தங் கியிருந்தார் . இதிலிருந்து இந் நாட்டுப்புறக்கதைகள் வழக்கில் இருந்த போது, காவேரிப்பட்டணம், சோழர்களின் தலைநகர்களில் ஒன்று (அக்கதையில் சோழர்கள் பெயர் சுட்டிக் கூறப்படவில்லை என்றாலும்) என்பதும், வட இந்தியக் கிளைமொழி