பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயலாத ஒன்றாம். அவன் வட பம்பாயைச் சேர்ந்த இன்றைய ஸோபராவாம் ஸப்பரகாவில் கரை இறங்கினான். சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பெரிபுளூஸ் என்பவரால், ஸோபட்மா என்பது கீழ்க்கடலைச் சேர்ந்த துறைமுகமாகக் குறிப்பிடப்பட்டுளது. ஆதலின், இது

பெரும்பாலும் ஒரு தவறு ஆகும். வங்காளக் கடற்கரையிலிருந்து புறப்பட்டுச் சிலோனுக்குச் செல்ல வேண்டிய ஒரு கலம், ஸோபாவுக்குச் செல்வது இயலாத ஒன்று. அங்கிருந்து, அவன் மீண்டும் கலம் ஏறிச் சிலோனுக்கு வடக்கில் இருந்த தம்பபண்ணியில் கரை இறங்கினான். ஆங்கு வாழ்ந்திருந்த மக்களாம் யக்கர்’களை (யக்க்ஷ) வென்று அழித்து, அந் நாட்டின் அரசன் ஆகிவிட்டான். தனக்கும், தன் உடன் வந்தவர்க்கும் மனைவியர் வேண்டி, பண்டு அரசன் மகளை இசைவிப்பதற்காகவும், ஏனையோர்க்கும் மனைவியர்களைப் பெறும் பொருட்டும், பரிசில் பொருள்களோடு, ஆன்றோர் சிலரை தக்சின (தென் இந்தியா) நாட்டில் உள்ள மதுரைக்கு அனுப்பிவைத்தான். (மதுரை அரசன பண்டவ" என அழைக் கப்பட்டான். பதஞ்சலி, பாண்டு என்ற சொல்லிலிருந்து பாண்டிய என்ற சொல்லைத் தோற்றுவிப்பது போல, பாலி

மொழி எழுத்தாளர்கள், பாண்டியா’’ என்ற அவர்களுக்கு நன்கு தெரிந்த 'பாண்டவா' என்ற சொல்லாகக் கருதுவர்) எண்ணற்ற தமிழ்ப் பெண்கள். அணிகளால் ஒப்பனை செய்யப்பெற்று, யானைகளும், குதிரைகளும். பொதி நிறை வண்டிகளும் பின்தொடர சிலோன் சென்றனர். . இந்தக் கதை, வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையிலான மிகப்பழைய போக்குவரத்து, தொடர்ந்து இருந்தமைக்குச் சான்று பகர்கிறது. இது பாண்டியர்களும், வடநாட்டவரும் ஒரு வருக்கொருவர் அ றி மு க ம் ஆகா அந்நியர் அல்லர் , மாறாக வழக்கமான நிகழ்ச்சிபோல, பாண்டியர் மகள் ஒருத்தி, விஜயனுடைய கைப்பிடிக்க, ஆணையிட்டுப் பெறுமளவு ஒருவருக்கு ஒருவர் அறிமுக மானவர் என்பதையும் உறுதி செய்கிறது. அர்ச் சுன்ன், சித்ராங்கதாவையும் மணந்துகொண்டு, நாகர் மகள்