பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு வாணிகம் கி. மு. 1000 - 500

215

போக்குவரத்தினை மேற்கொண்டிருந்தனர் [J. R. A. S. 1910 : Page : 13]

ஏலமும், மற்றும் பிற சீனநாட்டுப் பண்டங்களும் இந்தியக்கப்பல்களில் மேற்காசியாவுக்கும், கிழக்கு ஆப்பிரிக்காவிற்கும் தொடர்ந்து சென்றுகொண்டு இருந்தனவாகவே, இக்காலகட்டத்தில், கொரமண்டல, மலபார் கடற்கரைகள், சீனாவுடன் கொண்டிருந்த வாணிகம், வழக்கற்றுப் போகவில்லை என உறுதியாகக் கூறலாம்.