பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

தமிழர் வரலாறு

விதியினைக், காத்யாயனர் வகுத்தார். (பாண்டொர் ட்யன் வக்தவ்யஹ் [பதஞ்சலியின் வியாக்கரண மகாபாஷ்யத்தின் திரு.கெயிலார்ன்ஸ் அவர்களின் பதிப்பு பகுதி : 2. பக்கம் : 269] “சொட” மற்றும் வேறு சொற்களின் தோற்றம் குறித்துப், பாணினியின் வேறு ஒரு விதியினை மேற்கொண்டுள்ளார் காத்யாயனர்.

“காம்போஜ என்ற சொல்லுக்குப் பின்னர் ஈற்றுவிகுதி எதுவும் இல்லை” என்பதே அவ்விதி. இவ்வகையில், ஒரு தாட்டைக்குறிக்கும் “காம்போஜ” என்ற சொல்லிலிருந்து, அதன் அரசன் பெயராம் “காம்போஜஹ்” என்ற சொல் பெறப்படும். காத்யாயனர், இவ்விதியை, “காம்போஜ” மற்றும் பிற பொற்களுக்கு இணைக்கும் “லுக்” என்ற விகுதி “சொட” மற்றும் பிற சொல்லாக்கத்திற்கும் பயன்படுத்தப்படும் என மேலும் விரிவுபடுத்தினார். [கம்பொஜாதிப் யொலுக் வகனம் சொடாத்பர்த்ஹம்”.] இவ்வாத்திகம் (விதி) சொடஹ், கதொஹ், கெரளஹ் என்ற சொற்களின் தோற்றத்திற்கு வழி செய்வதாகப் பதஞ்சலி கூறுகிறார். இவ்வகையில், அரச இனப்பெயர்களைக் குறிக்கும் சொட, கெரள என்ற இவ்விருசொற்களும் அந்நாடுகளைக் குறிக்கும் சொற்களிலிருந்து பெறப்பட்டன. ஆனால், பாண்ட்ய என்ற சொல் மட்டும், ஒரு நாட்டின் பெயராகவும், ஓர் அரச இனத்தின் பெயராகவும் ஒருசேர வழங்கப்பெறும் பாண்டு என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது என்ற கருத்துடையவர் காத்யாயனரும், பதஞ்சலியும் எனத் தெரிகிறது.

மதுரை சூழ்ந்த நாட்டிற்கு அரசு வழங்கிய பழங்குடி இனம், “பாண்டியர்” என அழைக்கப்பட்டனரே அல்லது “பாண்டு” என அழைக்கப்படவில்லையாதலின், இச்சொற் பிறப்பு முறை ஏற்றுக்கொள்ளக்கூடியதன்று. உண்மை இயல்பு இதுவாகவும், இச்சொற்பிறப்பு முறை மீது, பாண்டு என அழைக்கப்படும் வடநாட்டுச் சத்திரிய இனம் ஒன்று தென்னாடு நோக்கிக் குடி பெயர்ந்து, தென்னாட்டிலும், இலங்கையிலும் பாண்டிய அரசுகளை நிறுவினர் என்ற மிகப்