பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடக்கும் தெற்கும் கி. மு. 500 ... 1 வரை

225


இது பண்டங்களைக் கொண்டு செல்லும் பழைய முறையினைப், புகைவண்டித் தொடர்களும், லாரிகளும், அழித்து விடாமல் விட்டு வைத்திருக்கும் இடங்களில் இன்றும் நாம் காண்பதுபோல, "கிரீச்" எனும் ஒலி ஓயாது எழ, குமரி முதல் பாடலி வரையான, சீர்மிகு, சீர்கெட்ட நெடுஞ்சாலைகளில், செல்லும் கட்டை வண்டிகளாம் வணிகச் சாத்துக்கள் மூலம் நடைபெற்ற மிகப் பெரிய வாணிக நிலை பற்றிய காட்சியைக் காட்டுகிறது. வேறு ஒர் இடத்தில் அரசன் கருவூலத்திற்குச் செல்லும் அரும் பொருட்கள் பற்றிக் குறப்பிடும்போது, கெளடல்லியர், தாம்பரபரணி, பாண்டிய காவடகா, மற்றும் சூர்ணா (இது, பிற்காலத்தே உரையாசிரியரால், "முரசி" அதாவது கேரள நாட்டில் உள்ள முசிறிக்கு அணித்தாக ஒடும் ஆறு என விளக்கம் அளிக்கப்பட்டுளது) ஆகிய இடங்களிலிருந்து வந்த ரத்தினங்கள் (அர்த்தசாஸ்திரம் : 11 26 :2) பல்வேறு வண்ணங்களில் ஆன வைடூரியங்கள் (மேற்படி : 26 : 30) (ஒர் உரையாசிரியர் இது, ஸ்திரீராஜ்யத்திலிருந்து அதாவது மலபாரிலிருந்து வந்ததாகக் கொள்வர்), பட்டை தீட்டப்பெற்ற மாணிக்கக்கல்லின் மேனி போல் மெத்தென்றிருக்கும், கருமை நிறம் வாய்ந்த பெளண்ட்ரகக் கம்பளங்கள், (அர்த்த சாஸ்திர மொழி பெயர்ப்பாளராகிய காமா சாஸ்திரி யார் இவை, பாண்டி நாட்டுச் செய்பொருள்கள் என்கிறார்) [பக் : 90]. மற்றும், மதுரையில் இருந்து வந்த பருத்தி ஆடைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். (Arthasastrai Jolly and Schmidt. ii. 26. 119]

சந்திரகுப்தனும் தென் இந்தியாவும் :

கி. மு. நான்காம் நூற்றாண்டின் கடைசி கால் நூற்றாண்டில், உலகம் அறிந்த தனிமிகு புகழ்வாய்ந்த சந்திர குப்தன், ஒரு நூற்றாண்டின் கால் கூறு காலத்திய ஒளிமயமான ஆட்சிக்குப் பின்னர், இந்தியப்பேரரசர் பலரையும் போலவே, வைராக்கியமாகிய நோயால் திடுமெனப் பற்றிக் கொள்ளப்பட்டு, ஒரே இரவில் வாளையும் முடியையும் துறந்து, சமணத்துறவியாகி, பத்ரபாகுவின், 12,000 மாணவர்

த. வ.-15