பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடக்கும் தெற்கும் கி. மு. 500 ... 1 வரை

229


இப்புத்தத் துறவிகள் தங்கள் சமயப் பிரசாரத்திற்கு மகதப் :பேரரசின் துணையையும் பயன் கொண்டனர்.

அசோகனும் தமிழ்நாடும் :

ஆனால், அசோக வர்த்தனன் காலத்திலும், தமிழ்நாடு, மகத ஆட்சி எல்லைக்கு வெளியிலேயே இருந்துவந்துள்ளது. மக்களின் நோய் தீர்க்கவும், மாவினங்களின் நோய் தீர்க்கவும், அவன் நிறுவிய இரு நிறுவனங்கள் குறித்துப் பேசும், அவனுடைய இரண்டாவது பாறைக்கல்வெட்டில், சோழ, பாண்டிய, ஷத்திய புத்திர, மற்றும் கேரள புத்ரர்களை "அந்த" அதாவது அண்டை நாட்டவர் அல்லது, எல்லைப் புறத்தில் உள்ளார், என்றே குறிப்பிட்டுள்ளான். அவனுடைய 13 வது கல்வெட்டில், தெற்கில் தம்பண்ணி அதாவது தாம்பரபரணி வரையான சோழ பாண்டிய நாடுகளில் தர்ம விஜயத்தில் வெற்றிகொண்டதாகக் கூறுகிறான். உலகிற்கு உபதேசிப்பதில் அவன் பெருமகிழ்வு கண்ட, பிராமண, சமண, பெளத்த சமயப் பேராசிரியர்கள் வழங்கும் அறிவுரைகளின் ஒன்றுபட்ட தொகுப்புத் தர்மமாம் பல்வேறு வகையான நன்னெறிகளை, மக்களுக்குப் போதிக்கும் சமயத் தூதுவர்களைப் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதுதான், தர்ம விஜயம் என்பது. இது பண்டைக்கால, இன்றைய வரலாற்றுத் திறனாய்வாளர் இரு திறத்தவராலும், பல்வேறு நாடுகளுக்குப் பெளத்த சமய போதனையாளர்களை அனுப்பியதாகத் தவறாகக் கொள்ளப் பட்டுள்ளது. ஒன்று, அசோகன், ஒருவர் விடாமல் மக்கள். அனைவர்க்குமான தன் உபதேசங்களைப் "பெளத்த சத்யாணி" என்று எக்காலத்தும் பெயரிட்டு அழைத்ததில்லை. மாறாக, எச்சமயத்தோடும் சாராததான "தர்மம்" என்றே எப்போதும் பெயரிட்டு அழைத்துள்ளான். இரண்டாவது, பெளத்த மதம் பரப்பும் புத்த சந்நியாசிகளைப், பல நாடுகளுக்கும் அனுப்பிய தன் செயலைப், பலரும் அறியச் செய்ய விரும்பியிருந்தால், உஜ்ஜைனியில் தான் ஆளுநராக இருந்த போது மணந்துகொண்ட தேவி வழிப்பிறந்த தன் மகன் மகிந்தனைப், புத்தமதம் பரப்ப ஈழ நாட்டிற்கு அனுப்பி