பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

தமிழர் வரலாறு

பிற்காலப்பாக்களைக் கொண்ட மற்ற நான்கு தொகைகள் :

இந் நான்கு தொகை நூல்கள் அல்லாமல், ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிநூற்றி ஐம்பது என்ற வேறு. நான்கு தொகை நூல்களும் உள்ளன. இவை முன்னவை போல, வேறு வேறு ஆசிரியர்களால், பாடப்பட்ட வேறுவேறு பொருள் கொண்ட பாக்கள் கலந்துவரத் தொகுக்கப் பெற்றவை அல்ல. முதலாவதான ஐங்குறு நாறு, ஒவ்வொரு திணைக்கும் அத்தினைப் பொருளை விளக்க, ஒர் ஆசிரியரால் பாடப்பெற்ற நூறு நூறு பாக்களாக, ஐந்திணைக்குமாக ஐந்நூறு பாக்களின் தொகுப்பு ஆகும். அது போலவே கலித்தொகை, ஒவ்வொரு திணைக்கும் முப்பது என ஐந்து திணைக்குமாக, முன்னைய தொகைகளின் பாவகை போல் அல்லாமல், வேறு பாவகையில் யாக்கப்பட்ட, ஆனால் அதேபயன் குறித்த நூற்றிஐம்பது பாக்களைக் கொண்டது. பரிபாடல் என்ற பாவகையில், வைகை, திருமால், முருகன் என்ற தலைப்புகளில் பாடப்பெற்ற பாக்களின் தொகுப்பு, பரி பாடல். பதிற்றுப்பத்து, சேர அரசர்களின் புகழ்பாட இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு ஆகும். இத்தொகை நூல்களில், அவ்வப்போது நிகழ்கிற சிறப்பு நிகழ்ச்சிகளைக் கொண்ட பாடல்களே இடம்பெற்றிருக்க, முந்தைய நான்கு தொகை நூல்களில், குறிப்பிட்ட ஒரு கொள்கையை விளக்க, ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகப் பாடப்பட்ட பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பதால், பிந்திய தொகை நூல்கள் நான்கும், முந்திய தொகை நூல்களிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடுகின்றன. இலக்கியத் திறனாய்வு குறித்துத் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரங்கள் வகுத்த நெறிகளில் பாக்கள் புனையப்பட வேண்டும் என்ற எண்ணம், பிற்காலத்தில் வழக்கில் வந்தது. மேலும், பிற்கூறிய தொகை நூலை உருவாக்கிய பாக்கள், சிவன், விஷ்ணு குறித்த ஆரியக் கோட்பாடுகளும், 'ஆகம நெறி போதிக்கும் வழிபாட்டுமுறைகளும் தமிழ்நாட்டில் கால் கொண்டுவிட்ட காலத்தை, வேறு வகையில் கூறுவதானால், சிந்தனையிலும், வழிபாட்டு முறையிலும், தமிழர்கள். ஆரிய மயமாகிவிட்டக் காலத்தைச்