பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி. மு. 500 ... 1 வரை

251.


பாக்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டாலும், அவை ஒருசிலவே ஆயினும், அவற்றை, அக்காலத்திய இலக்கியங்களின் நினைவுச்சின்னங்களாகக் கொள்ளலாம். அவற்றிலிருந்து, தமிழ்நாட்டு ஐந்திணைகளில், ஒவ்வொரு திணைக்கும் உரியவாய சில பாக்களை ஈண்டு எடுத்துக்காட்டுகிறேன். அப் பன்னெடும் காலத்தில் தமிழர் நடத்திய வாழ்க்கை நிலை பற்றிய படக்காட்சியை, மறுவலும் உருவாக்கிக் காணப் படிப்பார்க்கு அவை துணை புரியும். இந்த வாழ்க்கை முறை பெரும்பாலும் அக்காலத்திற்கு முன்பும், அக்காலத்திற்குப் பின்பும், இருந்த வாழ்க்கை முறையே தான் என்பதும் காணப்படும். புறத்தூண்டுதல் இன்றி, அகத்துாண்டுதலால் எழும் இயற்கைக் காதல் நிலை, பின்வரும் சிறுபாட்டில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. "என் தாயும் உன் தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவின் முறையினராவர்? என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர் : உள்ளத்தால் இப்போது ஒன்றுபட்டு நிற்கும் நானும், நீயும். ஒருவரையொருவர், எவ்வாறு முன்பு அறிந்திருந்தோம்? இம் மூன்றும் இல்லையாகவும், செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர், அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைதல் போல, அன்புடைய நம்நெஞ்சங்கள், தாமாகவே ஒன்று கலந்துவிட்டனவே. -

"யாயும் ஞாபும் யாரா கியரோ ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும் ?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

-

-குறுந்தொகை : 40

காதலர், என்றும்போலவே, அன்றும் மன உறுதியுடையரல்லராயினர். அதனால் காதலனால் கைவிடப்பட்ட கன்னிப்பெண், அக் கைவிடப்பட்டமையை எண்ணி எண்ணிப் புலம்பத் தொடங்கிவிட்டாள். 'நானோ, இவ்விடத்திலேயே