பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

3

என் நூலில் விளக்கப்பட்டுள்ளன. (அவர்களின் பழம் இலக்கியச் சார்புடையவும்,வேறு வகைச் சார்புடையவும் ஆய கால வெள்ளத்தின் அழிவுக்கு ஆட்பட்டுப்போகாமல், என்னென்ன பேணிக்காக்கப்பட்டுள்ளனவோ அவற்றிலிருந்தும் சமஸ்கிருதம், பாலி, கிரேக்கம் ஆகிய மொழிகளிலும் இலத்தின் தொன்மைவாய்ந்த) ஆவணக் குறிப்புகளிலிலும் இவர் பற்றிக் கூறியிருக்கும் குறிப்புகளிலிருந்தும், பெறக்கூடிய தமிழர் வரலாற்றின் மறு தொகுப்பிற்கான ஒரு முயற்சியே இந்நூல்.


வரலாற்று மூலங்கள் :

தனி ஒருவர், மற்றும் சமூக வாழ்வின் குறிக்கோள் ஒழுக்கம் பற்றிய ஆரியரின் பழங்கருத்துக்களைக் கொண்டிருப்பதான, மந்திரங்கள், பிராமணம் என்ற பொருளில் நான் கொள்வதான வேத இலக்கியம் (இரண்டுமே ஒருசேர இருந்து வேதங்கள் எனப்படுவனவாகி) மற்றும் சூத்திரம், அதுபோலவே இராமாயண, மகாபாரத இதிகாசங்கள், புராணங்கள், பெளத்த, அர்த்தமாகத் ஜெயின் பழம்பெரும் பாலி மொழியிலான இலக்கியங்கள். அதாவது, ஆரிய வரலாற்று மூலங்கள் அனைத்தும், வரலாற்றுச் செய்திகளுக்காக முழுமையாகத் துருவித்துருவி ஆராயப்பட்டுவிட்டன. இவை போலும் வரலாற்று மூலங்களிலிருந்து பெறப்படும் செய்திகள் ஆரியர்கள், தமிழர்களோடு கொண்ட தொடர்பினை மட்டுமே விளக்கும் என்பது சொல்லாமலே விளங்கும். வடஇந்தியப் பழங்கதைகளைக் குறிப்பாகப் புராணங்களில் கூறப்பட்டிருக்கும் பழங்கதைகளை எடுத்தாளும் நிலையில், நான், திருவாளர் பர்கிதர் அவர்களின் நுணுகிய ஆய்வு முறையினையும் முடிவுகளையும், பெரும்பாலும் முழுமையாகப் பின்பற்றியுள்ளேன். இக்குவாகு காலத்திற்கும் ஶ்ரீகிருஷ்ணன் காலத்திற்கும் இடையில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் வந்துவந்து காட்சி அளித்துப் படிப்பவரைக் குழப்பத்திற்குள்ளாக்குவோர்களாய அகஸ்தியர் ஒரே அகஸ்தியர் அல்லர், வசிஷ்ட்டர், ஒரே வசிஷ்ட்டர் அல்லர், விசுவாமித்திரர், ஒரே விசுவாமித்திரர்