பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி. மு. 500 ... 1 வரை

255


'நீண்ட தெருவுபோலும் பெருவழிகளில் நெடிது நடை போட்ட நம் வீரர்கள் ஆங்காங்கே இருந்து இளைப்பாறலாயினர். வெண்காந்தள் மலரின் பெரிய இதழ்கள், குதிரைளின் கவிழ்ந்த குளம்புகளால் மிதியுண்டு, வெண்சங்கு உடைந்து சிதறினாற்போல் சிதறுண்டு போயின. இவை கண்டு தோள் வலிக்க விரைந்து மீளும் நம் வருகையை, அழகிய புள்ளிகள் பொருந்திய அல்குலையும், இனிய மொழி'யையும் உடையளாய்த் தன் மகனை அழாமல் ஆற்றுவான் வேண்டிப் பொய்க்கதைகளைக் கூறிக்கொண்டிருக்கும் நம் காதலிக்கு, நிமித்தம் காட்டும் காக்கைகள் கரைந்து அறிவித்திருக்குமோ?

‘’இறையும் அருந்தொழில் முடித்தெனப், பொறைய.
கண் போல் நீலம், சுனைதொறும் மலர,
வீதா வேங்கைய வியன் நெடும் புறவின்
இம்மென் பறவை யீண்டுகிளை இரிய,
நெடுந்தெருவு அன்ன நேர்கொள் நெடுவழி
இளையர் ஏகுவனர் பரிப்ப, வளையெனக்
காந்தள் வள்ளிதழ் கவிகுளம்பு அறுப்பத்
தோள்வலி யாப்ப ஈண்டு நம் வரவினைப்
புள்அறி. வுறீஇயன கொல்லோ? தெள்ளிதின்
காதல் கெழுமிய நலத்தள்; ஏதில்
புதல்வற் காட்டிப் பொய்க்கும்
திதலை அல்குல் தேமொழி யாட்கே’’ -

-நற்றினை : 161

பிரிந்து வாழும் காலம் நனி மிகக் குறுகியதே ஆயினும், அப்பிரிவு தரும் துயர், தாங்க மாட்டாக் கொடுமை. வாய்ந்த தாம். காதலனைப் பிரிந்தாள் ஒர் இளமகள், தன் தோழி. முன் இவ்வாறு புலம்புகிறாள். “ஞாயிறு மறைந்துவிட்டான், முல்லை மலர்ந்து விட்டது; ஞாயிற்றுக் கதிர்களின் கொடுமையும் தணிந்து விட்டது; நம்மைச் செயலற்றவராக்கும் கொடிய,