பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

தமிழர் வரலாறு


நிற்கும் சந்தன மரத்தாலான சாந்தை அதன்மணம் அறிந்து வண்டுகள் வந்து மொய்க்க மேனியெல்லாம் பூசிக்கொண்டும், பெரிதும் விரும்பி மேற்கொண்ட அந்நட்பு, மெல்ல மெல்லச் சிறுகி, முடிவில் அதுதானும் இல்லாவாறு போய்விட்டது. போலும் ஒரு காட்சியை நான் மனக்கண்ணால் காணுகின்றேன். அதுகுறித்து நாம் என்னதான் செய்ய இயலும்?"

"யாங்குச்செய் வாம்கொல்! தோழி பொன்வீ
வேங்கை ஓங்கிய தேம்கமழ் சாரல்,
பெருங்கல் நாடனொடுஇரும்புனத்து அல்கிச்,
செல்வாய்ப் பைங்கிளி ஒப்பி ; அவ்வாய்ப்
பெருவரை அடுக்கத்து அருவி ஆடிச்
சாரல் ஆரம் வண்டுபட நீவிப்
பெரிதுஅமர்ந்து இயைந்த கேண்மை சிறுநனி
அரிய போலக் காண்பேன் ; விரிதிரைக்
கடல்பெயர்த் தனைய வாகிப்
புலர்வதம் கொண்டன, ஏனல் குரவே.

-நற்றினை : 259

பாலை நிலத்தில் :

‘’மேலைத் திசையில் சாய்ந்துவிட்ட ஞாயிறு மறைந்து போகவே வந்து பரவிய மாலைப் போதில், ஞாயிற்று வெப்பத்தால் நிலம் பிளவுபட்ட நீண்ட மலைச்சாரலில், ஒன்றிற்கும் உதவா வன்னிலத்தில் அமைந்த சிறிய குடிலின்கண், வழங்குவார் அற்றுப்போகவே, அழகிழந்து அச்சம் ஊட்டும் ஊர்மன்றத்தில் உள்ள கல்லிடை அகழ்ந்த குழிகளில் தேங்கிக் கிடக்கும் கலங்கல் நீரைப், பெருமழைப் பொழிவைக் கண்டும் அறியாக் கொடுமையால் முகந்து கொணர்ந்து, பசி தீர்க்க மாட்டாக் குறையுணவே உண்டு, இரவில், அழுக்குப்போகத் துவைத்தல் அறியாமையால் காவிபடிந்த ஆடைகளையும் ஏவினார் உயிரைத் தப்பாது கொல்லவல்ல அம்புத் தொடை