பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

தமிழர் வரலாறு

ஆடுதலைத் துருவின் தோடுதலைப் பெயர்க்கும்
வன்கை இடையன் எல்லிப் பரீஇ
வெண்போழ் ததைஇய அலங்கலம் தொடலை
மறுகுடன் கமழும் மாலைச்
சிறுகுடிப் பாக்கம்”
-நற்றிணை : 169 : 4-10


தொழுவத்தில் கட்டப்பட்டிருக்கும், பெரிய தலையினை உடைய கரிய எருமையை, அதனிடமிருந்து மிக இனிய பாலை நிரம்பக் கொள்வான் வேண்டி, அவற்றின் கன்றுகளை அத்தொழுவத்திலேயே விட்டுவிட்டு, ஊரில் மாடு மேய்க்கும் இளம் சிறுவர்கள், அவ்வெருமைகளின் மேல் அமர்ந்து கொண்டு மேய்புலம் நோக்கிக் கொண்டுசெல்லும், நிறை இருள் மெல்ல மெல்லக் கழியும் விடியற்காலம்.

“மன்ற எருமை மலர்தலைக் காரான்
இன் தீம் பால்பயம் கொண்மார், கன்றுவிட்டு
ஊர்க்குறு மாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும்புலர் விடியல்”
-நற்றிணை : 80 : 1 - 4


கடல் சார்ந்த கிலத்தில் :

கடல் சார்ந்த நிலத்தைச் சேர்ந்த இளமகளிர் நாள் தோறும் முறைய. க மேற்கொள்ளும் வாழ்க்கை முறை, அப்பெண்களின் தோழி பாடிய இந்தப் பாட்டிலிருந்து நன்கு தெரியவரும்.

“தோழி! நீ வாழ்வாயாக! பெரிய உப்பங்கழிகளில் உள்ள மீன்களாகிய இரையைத் தின்ற பல்வேறு இனப்பறவைகளின் வரிசை வரிசையான கூட்டம், வளைந்த பனைமடல்களிடையே கட்டிய குடம்பைகளில், அடங்கி இராப்பொழுதை நெருங்கியிருந்து கழிக்கும். அப்பனைமரங்கள் வானளாவ உயர்ந்துநிற்கும், வெண்மணல் பரந்த கொல்லைகள் சூழ்ந்த