பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி. மு. 500 ... 1 வரை

277


பெயரிலேயே அழைக்கப்பட்டன. அதில், கந்து அல்லது கந்தம் எனப்படும் மரக்கிளை நடப்பட்டு, அம்மரத் துண்டில் இடம் பெற்றிருப்பதாகக் கருதப்படும் கடவுள், தண்ணுமை முழக்கத்திற்கிடையே வழிபடப்பெறும். பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை (புறம் : 89 : 7). இவ்வரங்குகளில், ஆரியர்களிடையே, நிகழ்ந்தது போலவே, பண்டைக் காலத்தில் சமய நிகழ்ச்சிகளோடு நடைபெற்றதான சூதாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. கீழ்வரும் பாட்டு, அவ்வாறு பாழுற்றுக் கைவிடப்பட்ட ஒரு கோயில் பற்றிய விளக்கமாம்: வீடுதோறும் மீன் சுடுதலால் புலால் நாற்றத்தோடு கலந்து எழும் புகையின் நீண்ட ஒழுங்கு, வயலருகே நிற்கும் மருத மரத்து வளைந்த கோடுகளில் சென்று சூழ்ந்துகொள்ளும் பெரிய வருவாய் இப்போது இல்லையாகிப் போகவே, முழவு முதலாயின முழங்க, பலியிட்டு வழிபட்ட கடவுள் எல்லாம், தாம் குடியிருந்த கந்தங்களை விட்டுப் போய்விட்டன: அதனால் பாழுற்றுப்போன ஊர் மன்றங்களில் பண்டெல்லாம், நரைதிரையுற்ற முதியோர் ஒய்வாக அமர்ந்து சூதாடுங்கால், சூதாடுகருவிகள் வீழ்ந்து வீழ்ந்து பண்ணிவிட்ட குழிகள், உடலெல்லாம் புள்ளிகளைக் கொண்ட காட்டுக் கோழிகள் இட்ட முட்டைகளால் நிறைந்துவிடும்.

‘’மீன்சுடு புகையின் புலவு நாறு நெடுங்கொடி
வயலுழை மருதின் வாங்கு சினை வலக்கும்
பெருநல் யாணரின் ஒரீஇ, இனியே
கவிகெழு கடவுள் கந்தம் கைவிடப்,
பலிகண் மாறிய யாழ்படு பொதியில்
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லில்.நல்லகம் நிறையப் பல்பொறிக்
கான வாரணம் ஈனும்‘’.

- புறம் : 52 : 9.15

இதுபோலவே பாழுற்றுப் போன பொதியிலில் உள்ள பள்ளங்களிலிருந்து கொண்டுவந்த தண்ணீரை நன்றிணை குறிப்பிடு