பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு ... கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை

291

 முதல் தாலமி. சூயஸ்கால்வாய், ஓரளவு திறக்கப்பட்டு, வாணிகப்போக்கு வரவிற்கு வழிசெய்யப்பட்டது. வணிகச் சாத்து செல்லும், தங்கும் இடங்களுக்கும், குடிநீர்க் கிணறுகளுக்கும் வசதி செய்து தரப்பட்ட, பல்வேறு வழித்தடங்கள், கடலுக்கும், நைல் நதிக்கும் இடையே திறக்கப்பட்டன: அவ்வழித்தடங்கள் முடியும் இடங்களிலெல்லாம், துறை முகங்கள் நிறுவப்பட்டு, சுங்கவரி விதிக்கும் அரசு அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டன. தன் முந்தைய செல்வ வளத்தையும் புகழையும், எகிப்து, ஒரளவு திரும்பப் பெற்று. விட்டது. தாலமியின் நகர்வலத்தில் பிலெடெல்பஸ் நகரில் இந்திய மகளிர், இந்திய வேட்டை நாய்கள், இந்தியக் காக்கைகள், ஒட்டகங்கள் மீது ஏற்றப்பட்ட, இந்திய மணப்பொருள்கள் காணப்பட்டன.

கிரேக்க இடைத்தர்களும், நடுவர் இருவர் குழு ஆட்சிக்கு உட்பட்ட ரோமும் :

கிறித்துவ ஆண்டு பிறப்பதற்கு முந்திய 500 ஆண்டுகளில், ஐரோப்பாவுடனான, இந்த இந்திய வணிகத்தில், கிரேக்கர்கள், பெரும் இடைத்தர்களாக இருந்தனர். உலகப் பெருநாடுகளுக்கு இடையிலான, இந்த விரிவான வாணிகப் போக்குவரத்தின் ஒருவிளைவு, தென்னாட்டு வணிகப் பண்டங்களின் தமிழ்ப்பெயர்கள், கிரேக்கப்பழங்குடியினரின் தூய கிரேக்க எல்லெனெஸ் மொழியால் (Hellenes) கடன் வாங்கப்பட்டன. திருவாளர்கள் ஸோப்ஹோக்கில்ஸ், (Sophocles) அரிஸ்டோபன்ஸ் (Aristophanes) ஆகியோர் எழுத்துக்களில், அவை இடம் பெறத்தொடங்கின: அவையாவன : தமிழ் அரிசியிலிருந்து ஒரைஸ் (Oryza) இலவங்கப் பட்டையாம் கருவாவிலிருந்து, கர்பியொன்" (Karpion) தமிழ் இஞ்சி வேர், சமஸ்கிருத ஸ்ரிங்கிவொராவிலிருந்து (Sringivera) ஜிக்கிபெரொஸ்'” (Ziggiberos),வால்மிளகைக் குறிக்கும் தமிழ் பிப்பிலியிலிருந்து 'பெப்பெரி," (peperi). இது இப்போது, ஐரோப்பிய மொழிகளில், கருப்பு மிளகைக் குறிக்கவும் ஆகிவிட்டது. பண்டைக் காலத்தில்