பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு ... கி.மு 600 முதல் கி.பி. 14 வரை

293


இக்கால கட்டத்தின் இறுதியில், மத்திய தரைக்கடல் மக்கள் மீது, அடுத்தடுத்துக் கொண்ட வெற்றியும், நடத்திய கொள்ளையும், உரோமப்பேரரசின் கருவூலத்திற்கு ஒப்புக் காட்ட இயலாப் பெருஞ்செல்வத்தைக் கொண்டுவந்து சேர்த்தன. கீழ்நாடுகளைச் சேர்ந்த, மதிப்புமிக்க வணிகப் பண்டங்கள் மீதான சுவை, ஒரே இரவில் வளர்ந்துவிட்டது. சிற்றாசியா, சிரியா நாடுகளை வென்றுகொண்டாரைச், சிறப்பித்து மக்கள் எடுத்த விழாக்கள், மக்கள் ஆர்ப்பரிப்புக்குக் காரணமாகிவிட்ட பெருஞ்செல்வத்தால் சுடரொளி வீசிச் சிறப்புற, [Scoffs periplws. page : 5] பழைய சிக்கன, எளிய வாழ்க்கை முறை, பகட்டு வாழ்வின் கவர்ச்சி முன் நிற்க மாட்டாது, நெடுங்காலத்திற்கு முன்பே விடை பெற்றுக் கொண்டது. கி. மு. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில், தூரக்கிழக்கு வணிகப் பண்டங்கள், கணிசமான அளவு, உரோமை வந்தடையலாயின. [Warminston J. R. A. S., 1904. page. 4 sweli.]

உரோமப் பேரரசின் தொடக்கத்தில் :

அகஸ்டஸ் (Augustus) எகிப்தை, கி. மு. 30இல் வெற்றி கொண்டு, இந்தியாவுக்கும், உரோமப்பேரரசுக்கும் இடையில், ஒரு நேரிடைக் கடல் வாணிக வளர்ச்சிக்கு முயன்றான்: கி. மு. 25இல், ஏறத்தாழ 120 கப்பல்கள், ஹோர்மஸ்ஸிலிருந்து (Hormws), இந்தியாவுக்குப் பயணம் செய்ததைத், தாம் பார்த்ததாகத் , திரு. ஸ்டிராபோ (Strabo) கூறுகிறார்: [Mcrindle Ancient India, page . 6] ‘ ‘இந்தியாவின் பல்வேறு நாடுகளிலிருந்து அரசியல் தூதுவர்கள் அகஸ்டஸ்பால் சென்றனர். இந்தியத் தூதுவர்கள், அடிக்கடி வந்ததாக அவனே கூறுகிறான்” [Warmington Commerce between the Roman Empire and India, page 35] அக்கால சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், தனித்தனித் தூதுவர்களை அனுப்பியதாக, திருவாளர் வார்மிங்டன் கூறுகிறார். (Warmington. Commerce between the Roman Empire and India; p. 37] இது, ஆகஸ்டஸ் காலத்தில், இந்தியா, உரோமுடன் நடத்திய