பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

தமிழர் வரலாறு

வாணிக அளவு மிகப்பெரிய அளவினதாய்ப் பெருக வழி செய்தது. இவ்வாணிகம் குறித்துத் திருவாளர் வார்மிங்டன் அவர்கள், "உரோமுக்கும் இந்தியாவுக்குமிடையிலான வாணிக அளவை மதிப்பிட்டுப் பார்த்தால், அகஸ்டஸின் உண்மையான தொடக்கநிலை ஆட்சிக் காலத்தின் போதே, அது, இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான வாணிகம் எப்போதும் இயல்பாக இருக்கும், அந்த அளவு அடைந்து விட்ட, குறிப்பிடத்தக்க அப்பெரு நிலையை நாம் கண்ணெதிராகக் காணக்கூடும். தொடக்க நாளிலிருந்தே, இந்தியப் பண்டங்களின் வருகைப் பெருக்கத்திற்குப் பேரரசின் பண்டங்களைக் கொடுத்துச் சரிஈடு செய்ய முடியாது போயிற்று. அதன் விளைவு பண்டங்களுக்குப் பதிலாக, உரோமானியர், சென்றால் திரும்பிவராத, அடித்த நாணயப் பணங்களை வெளியேற்றினர். [Warmington. page : 38] நாணயப் பணங்களை ஏற்றுமதி செய்வதில், தொடக்கத்தில் ஒரு மோசடி வெளிப்படையாகவே செய்ய முயலப் பட்டது. அகஸ்டஸ் நாணயத்திற்குப் பதிலாக, அவனுடைய தத்துப் பிள்ளைகளாம், கையஸ் (Gaiws) லூசியஸ் (Lwoiws) என்பார் உருவங்கள் பொறிக்கப்பட்ட பொன்னுக்குப் பதில் முற்றிலும் பொன் முலாம் பூசப்பட்ட நாணயங்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவில் கைம்மாறின. உள்நாட்டு மக்கள், போலி நாணயங்களிலிருந்து, உண்மையான உரோம நாணயங்களை, இன்னமும் வேறு பிரித்து உணரமாட்டா, தென் இந்தியாவோடு நடத்தும் வாணிகத்திற்காகவே அத்தகைய நாணயங்கள் தனியாக அடிக்கப்பட்டனவாக எர்னஸ்ட் (Ernst) எண்ணுகிறார் எனக் கூறுகிறார் திருவாளர் வார்மிங்டன் (Warmington, p. 139) ஆனால், தமிழர்கள் கூர்மதிவாய்ந்தவர் என்பதை உறுதி செய்துவிட்டனர். காரணம், அற்பத்தனமான அச்சோதனை மீண்டும் முயலப் படவில்லை. இந்நூற்றாண்டு கால அளவில், மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வணிகப் பொருள்கள் யாவை ? -