பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘’தக்கோலம்‘’ என்ற இடத்தை, மிலிந்தா பன்ஹ (Milindapanha) குறிப்பிடுகிறது. அவ்விடத்தின் பெயர், சென்னைக்கு அணித்தாக, கி. பி. பத்தாம் நூற்றாண்டில் ஒரு பெரிய போர் நடைபெற்ற தக்கோலம் என்ற ஊரின் பெயரை நினைவூட்டுவதாக உளது.


சீனாவின் ஆன் மரபுப் பேரரரசர் (Han Emperor) ஹூதி (Wo-ti) என்பான் இன்றைய துருக்கர்களின் முன்னோர்களாகிய ஹியுங்-நு (Hiung-Na) என்பாரைக், கோபி (Gobi) பாலைவனத்திற்கு அப்பால் துரத்திவிட்டான்; அதன் பின்னர், ஐரோப்பாவுடனான சீனப் பட்டுவாணிகம், பெரிய அளவினை எட்டிவிட்டது. இவ்வாணிகம் மேற்கொண்ட வழிகளில் ஒன்று, சூயஸ் வளைகுடாவலிருந்து வந்த யவனவணிகர்கள், சீனப்பட்டைத் தமிழ் இடைத்தரகர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும், தமிழ்நாட்டுக் கடற்கரையை ஒட்டிய வழியாம். பர்மா, மலேயா, சீனக் கடற்கரை நாடுகளுடனான கடல் வாணிகம், இக்கால கட்டத்தில் வளர்ந்து பெருகிற்று. ‘’கிழக்கிற்கு அனுப்பப் பட்ட மிக முக்கியமான பண்டம், மிளகு. மிளகு குறித்த தொடர்ந்த தேவை, உரோமில் எழுவதற்கு முன்பே, சீனாவில் இடங்கொண்டிருந்தது என்பது ஊகிக்கக் கூடியதே, மலபார் கடற்கரைக்குக், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில், ஏன், அதற்கும் முன்பாக, 'ஜங்' (Jwnk) எனப்படும் தட்டையான அடிப்பாகம் உடைய சீனக் கப்பல்கள் சென்றுவந்ததற்கு இதுவும் ஒரு காரணம்: (Scoff's Periplus, Page 213-14) தூரக்கிழக்கிற்கு, மிளகு மட்டுமல்லால் நறுமணப் புகைதரு பொருள்களும் அனுப்பப்பட்டு, பட்டிற்கும், சர்க்கரைக்குமாக, கைமாறப்பட்டன.