பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் ... முதல் நுழைவு

309


மொழிகளுக்கும் உள்ள பொது நிலையாம் என அவர் கருதுகிறார். உலக மொழிகள், ஒன்றோடொன்று உறவு கொள்ளாத, பல்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை; அடிப்படை அமைப்பிலேயே அவை, ஒன்றோடொன்று மாறுபடுகின்றன ; அதனால், ஒரு மொழியின் சொல்லிலக்கண அமைப்புக்குள், வேறுஒரு மொழியின் சொல்லிலக்கண அமைப்பைத் திணிப்பது இயலாது என்பன போலும் உண்மைகள் அகத்தியனார்க்குத் தெரியா. சமஸ்கிருதம் விரிவான, சொல்லிலக்கண வகைகளைக் கொண்ட, தனக்கே உரிய, சொல்லுரு மாற்று மொழி. ஆனால், தமிழ், தனி இருசொற்கள் இணைந்தே தொகைச் சொற்களை உருவாக்க வல்ல, எளிய தெளிவான சொல்லிலக்கணத்தையுடைய, ஒரு மொழியாகும். சமஸ்கிருத முற்றுத் தொடர்வாக்கியங்களில், சொல்லுக்குச் சொல் உள்ள சொற்றொடர் உறவு, அக்சொற்களின் இலக்கண உறவு உணர்த்த, அச்சொற்களின் ஈற்றில் இணைக்கப்படும் விகுதிகளினால் மட்டுமே உணரலாகும். ஆதலின், சொற்கள், வாக்கியத்தில் எங்கு வேண்டுமானாலும் இடம் கொள்ளலாம் என்பது, அம்மொழி நிலையாகத், தமிழ், சொற்களை வேண்டியவாறெல்லாம், இடம் மாற்றச் செய்ய இயலா, உறுதியான சொற்றொடர் நிலையினைக் கொண்டுளது. சமஸ்கிருத மொழியின் இவ் விகுதிகள், தம் நிலையில் பொருள் உணர்த்தும் சொல்லாக இடம் பெற மாட்டாச் சொல்லீறுகளினால் ஆக்கப் பட்டனவாம் ஆதலின், தங்களுக்கெனப் பொருள் இல்லாதன. ஆனால், பொருள் உணர் சொற்களில் உறவினை உணரத் துணைபுரிவன ஆகும். இவைபோலும் சொல்லீற்று. விகுதிகளை ஏற்றுக்கொள்வதனால், வேர்ச்சொல், வெறும் மூலமாக மாறி, அம் மூலமும் தனக்குத்தானே, தடம் காண மாட்டா மிகப்பெரிய மாறுதலுக்கு ஆளாக்கிவிடுகிறது: இவ்வகையில் '‘’தத்‘’ என்ற மூலம், ‘’அம்‘’ என்ற ஈறு ஏற்று ‘'தேவஸாம்‘’ என ஆகிறது. ‘’ஹன்‘’ என்ற வினைவேர்ச்சொல் பெறும் பல உருமாற்றங்களில் ஒன்று, ‘’ஜக்ஹான‘’ என்பது: அதுபோலு ‘’டஹ்” என்பதன் உருமாற்றம், ‘’அட்டொக்"