பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் ... முதல் நுழைவு

313

 பயனுடையதாக அமைந்ததாலும், அகத்தியனார், இச்செயப்பாட்டு வினையினைக் கண்டுபிடித்துள்ளார்; இயல்பான தமிழ்ப்பேச்சு நடையில், எந்தத் தமிழனும், எந்நிலையிலும் மேற்கொள்ளாததும், சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் எளிதில் மொழிபெயர்க்க, சமஸ்கிருதப் பண்டிதர்களுக்குத் துணை நிற்கக் கண்டுபிடிக்கப்பட்டதாலும், இப்போலி செயப்பாட்டுவினை, நம் காலத்தில் பொருள்களைச் செயப்பாட்டு வடிவங்களில் விளக்கும் ஆங்கிலத்தில் சிந்தித்துத், தமிழில் எழுதக் கற்றுக் கொண்ட காரணத்தால், எழுத்து நடைத் தமிழில், அது ஒரு நடைமுறையாகிவிட்டது. ‘’படு" என்ற, மொழி மரபிற்கு ஏலா ஒரு சொல்லுருபு, பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலின் ஒவ்வொரு பக்கத்தையும், துரதிருஷ்டவசமாகத், தமிழ்ப் பண்டிதர்களின் இலக்கியப்படைப்புகளையும் பாழ்படுத்துகிறது.


தமிழில், சமஸ்கிருத நாகரீக முதல் தலையீடுகளில், இவை ஒருசிலவே, அடுத்த தலையீடுகள், சொற்கள், கொள்கைகள், செய்யுட்கற்பனைகள், புராண, மற்றும் பிற கட்டுக்கதைகள், நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், விஞ்ஞான, ஒழுக்க, சமயப் பாடங்கள், உரைநடை, பாவகைகள், மற்றும் பிற பிற, காலம் செல்லச்செல்ல, சமஸ்கிருத நாகரீகத்தின் படையெடுப்பு, பிற்காலத் தமிழிலக்கியங்களை மட்டுமே தெரிந்த ஒருவனுக்குச், சமஸ்கிருத சொல்லாட்சி அற்ற, பிற்காலக் கற்பனைச் சிந்தனைகள் போல் அல்லாமல் இயற்கைச் சிந்தனைகளைக் கொண்ட தன்னுடைய மொழிநடை, அவன் தாய்மொழி யல்லாத வேற்றுமொழிபோலும் பழக்கமிலா மொழியாகத் தோன்றுமளவு, தமிழிலக்கியம், முழுக்க, முழுக்க வடவர்களின் ஆதிக்கத்தின் கீழ் அகப்பட்டுக் கொள்ளுமளவு மிகப்பெரிதாகி விட்டது.


அகத்தியனாருடைய, அவர் பெயரால், அகத்தியம் என அழைக்கப்படும் இலக்கணம் இப்போது இல்லை, ஆனால், ஜமதக்கினியார் மகன் திரணதூமாக்கினியார் இயற்றிய,