பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

தமிழர் வரலாறு

தொல்காப்பியனார் எனப் பயில அழைக்கப்படும் அவர் மாணவர் இயற்றிய, இலக்கணம் இன்றும் உளது. அது, தெளிவாக, அகத்தியத்தையே மூலமாகக் கொண்டுளது: இத்தமிழ் இலக்கணங்கள், எழுத்து, சொல், யாப்பு, ஆகியன பற்றி மட்டுமல்லாமல், பாட்டின் கருப்பொருள் குறித்தும் இலக்கணம் வகுப்பது, இவற்றின் தனிச்சிறப்பாம். பாட்டின் கருப்பொருள், இலக்கிய மரபுகள் ஆகியவற்றால், தமிழ்ச் செய்யுள், சமஸ்கிருதச் செய்யுளிலிருந்து அறவே வேறுபடுவது கண்ட இப்பிராமண ஆசிரியர்கள், தம் இலக்கண நூல்களில், இப்பொருள்கள் பற்றிய ஆய்வினையும் மேற்கொள்வது தேவை என உணர்ந்தனர். திரணதூமாக்கினியாரின் நூலாம், அவர் தமிழ்ப் பெயரால் வழங்கும் தொல்காப்பியத்தின் பிற்பகுதிகள், பண்டைத் தமிழ்ப் புலவர்கள், தமக்கே உரிய தனி இயல்யிற் பாடிய பாடற்பொருள்களாம் அகம், புறம் ஆகியவற்றின் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் குறித்தும் ஆய்வு செய்கின்றன. பொருளதிகாரம் என்ற தொல்காப்பியத்தின் ஈற்றுப் பகுதியிலிருந்து, ஆரியர்களோடு நெருக்கமான தொடர்பு கொள்வதற்கு முன்னர், தமிழர் நடத்திய வாழ்க்கை முறை, தமிழ் உள்ளம், ஆரிய இலக்கியங்களுக்கு ஆட்படாததற்கு முற்பட்ட தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் முழுப்படத்தை வரைந்து கொள்ளலாம்;

அதுபோலும் ஒரு படக்காட்சி, தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் காட்டியிருப்பதுபோல, "ஆரியத்துக்கு முந்திய தமிழர் நாகரிகம்" (Pre Aryan Tamil Culture) என்ற நூலிலும், இனி வர இருக்கும், பண்டைத் தமிழர்" (Ancient Tamils) என்ற என் நூலிலும் காட்டியிருக்கும் படக் காட்சிகளை, முழுமையாக்கும்.

பொருளதிகாரத்தில் ஆரிய நுழைவு:

தமிழ்ப் பாக்கள் குறித்த தம்முடைய இலக்கணத்தில், ஆரியக் கருத்துக்களை இறக்குமதி செய்யும் கவர்ச்சியிலிருந்து, தொல்காப்பியனார் விடுபடவில்லை. பண்டைத் தமிழ்ப்