பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லாமையால், எழுத்து என்ற அச்சொல்லை அப்பொருள் குறிக்கும் வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது இயலாது, அகூரா என்ற சொல் சமஸ்கிருத ஆசிரியர்களால், இவ்விருபொருள் குறிக்கும் வகையில், ஆளப்படுகிறது: ஆனால், அக்ஷரா என்ற அச்சொல். கேட்கக் கூடிய ஒலியை உருவாக்கும், காற்றின் அலை அதிர்வின், வானவெளி அடித் தளத்தின் மூலமாம் நிலைபேறுடைய ஒலி எனக்கருதும், மீமாம்சகர், மற்றும் வியாக்கர்னிகாக் கருத்துக்களோடு தொடர்புடையது ஆகலின், எழுத்து என்ற தமிழ்ச்சொல், அக்க்ஷரா என்பதன் மொழிபெயர்ப்பு ஆகாது.

எழுத்துக்கள் குறித்து அகத்தியனார் கூறும் இலக்கணப் படியே, தமிழ் வரிவடிவெழுத்துக்கள், உருது மொழிக்காகப் பயன்படுத்தப்படும் அராபிய எழுத்துக்கள் தவிர்த்து, இந்தியாவில் வழக்கத்தில் உள்ள எல்லா எழுத்துக்களையும் போலவே, "பிராமி" எனப் பெயர் சூட்டப்பட்ட, அசோகன் கல்வெட்டெழுத்துக்களிலிருந்தே, உருப்பெற்றன என்பதை நாம் அறிவோம். எழுத்தில் வடிக்கப்பெற்ற தமிழ்ச் சொற்களின், இதுவரை கண்டுபிடிக்கப்படாத மிகப்பழைய மாதிரி வடிவங்களின் உதாரணங்கள், பாண்டி நாட்டு மலைக் குகைகளில் உள்ள கல்வெட்டுக்களில் நமக்குக் கிடைக்கின்றன: இக்கல்வெட்டுக்கள், பித்துப் பிடித்து அலையும் மக்கள் கூட்டத்திலிருந்து, வெகு தொலைவில் உள்ள, இயற்கையான மலைக்குகைகளில் தங்களை அழியாப் பேரின்ப நிலையாம் நிர்வாண நிலைக்குக் கொண்டு செல்லும், அமைதியான தவ நிலையில் வாழ்ந்து வந்த பெளத்த, ஜைன முனிவர்களின் தூண்டுதலால் எழுதப்பட்டன. இக்கல்வெட்டுக்கள் நமக்குக் கிடைத்துள்ள தமிழ் எழுத்து முறை, மிகப்பழைய மாதிரி வடிவங்கள் மட்டுமன்று : பிராமி வடிவெழுத்துக்களை, மிகப் பொருத்தமுறச் சொல்வதானால், தென்னிந்திய மெளரிய வடிவெழுத்துக்களைத், தமிழ் எழுத்து நடைக்கு மேற் கொண்ட தற்காலிக முதல். முயற்சியுமாம். அவை, தனி மெய் எழுத்திற்கும், அகரமொடு இணைந்து வரும் உயிர் மெய் எழுத்திற்கும் இடையில், எளிதில் ஒலிப்பதற்கு வாய்ப்பாக,