பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"மெய் எழுத்துக்கள், அகரமொடு இணைந்தே ஒலிக்கப்படும் (மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்" (தொல்; எழுத்து : 13) எனத் தொல்காப்பியர் கூறுவது போல) எவ்வித வேறுபாடும் காட்டவில்லை : அதாவது மெய் எழுத்தை உணர்த்த, மேலே புள்ளிவைக்கும் முறை இன்னமும் கொண்டு வரப்படவில்லை. ஆனால், அவை, தமிழுக்கே உரிய சிறப்பு மெய்யாம் "ழ" இரட்டித்தவழி, வலிந்தும் மூக்கொலி எழுத்தாம் "ன"கரம் முன்வரும் போது மெலிந்தும் ஒலிக்கப் படுவதும், நாக்கை உள்மடித்து ஒலித்து எழுவதுமான "ற", றகரத்திற்கு முன்வரும் மூக்கொலி எழுத்தைக் குறிக்கத் தன்னால் மட்டுமே இயல்வதும், இன்றை ஒலிப்பு முறையில், பல்லொலி எழுத்தாம் "ந" கரத்திலிருந்து வேறுபாடு காண இயலாததுமாகிய இரு சுழி "ன" ஆகியவற்றைக் குறிக்கும் வரிவடிவங்களைக் கொண்டுள்ளன. ஆகக் கிடைக்கக் கூடிய அகச்சான்றுகளின்படி, கி. மு. மூன்றாவது நூற்றாண்டின் இறுதியில், அல்லது, இரண்டாவது நூற்றாண்டின் தொடக்கத்தில், கல்வெட்டு வடிப்பதில், நீடித்துப் பயின்று, அழியாப்பயிற்சி பெற்றுவிட்ட, வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால், தமிழ், முதன்முதலில், வரிவடிவில் எழுதப்பட்டது. எனத் தெரிகிறது. தமிழிலக்கியங்களை எழுதி வைப்பதற்குத் தனியான நெடுங்கணக்கு இல்லாமையே கிறித்துவ ஆண்டுத் தொடக்கத்திற்கு மிகவும் முற்பட்ட காலத்திலேயே, பெருமளவில் இயற்றப்பட்டிருக்க வேண்டியவாய, தமிழ்ப்பாக்கள், மீளவும் பெறமாட்டாவகையில், அழிந்து விட்டதற்குக் காரணமாம். ஆகவே, தமிழ் எழுத்து முறை, எல்லோராலும், பெருமளவில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய கி. மு. முதலாம் நூற்றாண்டிற்கு முன்னர், அகத்தியனார் வாழ்ந்திருக்க முடியாது என முடிவு செய்கின்றேன். தொல் காப்பிய ஆராய்ச்சி ஆசிரியரும் அவர் மாணவரும், அதற்கு, ஒரு நூற்றாண்டு அல்லது, சற்று அதிகப் படியான பிற்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் எனக் கொள்ளுமாறு நம்மை வற்புறுத்துகிறது. திருமணம், மற்றும் இனிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்புடைய நாழிகை எனும்