பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் . முதல் நுழைவு

321

தாலும், தமிழர்களின் பெரும்பகுதியினர், அதாவது, பார்ப்பனரல்லாதார், ஆரிய நாகரீகத்தால் அடிமை கொள்ளப்பட்டு, அதனால் கோள்கள் குறித்த வானநூல் அறிவைத், தொல்காப்பியர் காலத்துக்கு, மிக, மிக முற்பட்ட காலத்திலேயே, பெற்றிருந்தனர் ; அல்லது அதில் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவ் வானநூல் கலையோடு தொடர்புடையன, ஏழு நாட்களைக் கொண்ட வாரமும், ஒவ்வொரு நாளும் அந்நாளின் முதல் இரண்டரை நாழிகையை ஆட்சி செலுத்தும் கோளால் பெயரிடப்படுவதுமாம். ஆகவே, வாரத்தின் நாட்களின், கோள் சார்புடைய பெயர்கள் தமிழிலக்கியங்களில், கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை காணப்படவில்லை;

தொல்காப்பியப் பொருளதிகாரத்திலிருந்து பெறப்படும், தொல்காப்பியனார் காலத்தை உறுதி செய்யத் துணை புரியும், பிறிதொரு செய்தியும் உளது. அகத்தினைத் தலைவனின் தோழர்களாகவும், அவன் காதல் ஒழுக்கங்களுக்குத் துணைவர்களாகவும் வருவோருள், பார்ப்பார்களையும் குறிப்பிடுகிறார்:

“பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு அளவியன் மரபின், அறுவகை யோரும் களவினில் கிளவிக்கு உரியர் என்ப”

“பாணன், கூத்தன், விறலி, பரத்தை, யாணம் சான்ற அறிவர், கண்டோர் பேணுதகு சிறப்பின் பார்ப்பான், முதலா, முன்னுறக் கிளந்த கிளவியொடு தொகைஇத் தொன்னெறி மரபிற் கற்பிற்கு உரியர்”

“பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி, யார்க்கும் வரையார், யாப்பொடு புணர்ந்தே”

-தொல் : பொருள்: செய்யுள் : 181, 182, 189

த. வ.--21 .