பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் ... முதல் நுழைவு

327


"தென்னவன் மலை எடுக்கச், சேயிழை ஒடுங்கக் கண்டு,
மன்னவன் விரலால் ஊன்ற'".
-திருநாவுக்கரசர் தேவாரம் திருக்கச்சி மேற்றளி:

"தென்னவன்" என்பது, பாண்டிய மன்னர்களுக்குப் பொதுவாக இட்டு வழங்கும் ஒரு பட்டப்பெயர். அப்பாட்டு, ஆரியப் புராணக் கதைகள் தமிழ்நாட்டில் பரவ இடம் கொண்டுவிட்ட கி. பி. ஆறாம் நூற்றாண்டில் பாடப்பட்ட தாயின், அத் தொடரைத், தென் திசைக் கடவுள் எனக் கூறப்படும் யமனை வென்ற சிவனுக்கு அடுத்த நிலையில் இருக்க விரும்பினான் நெடுஞ்செழியன் என்ற பொருள்தரும் வகையில் கொள்ளலாம். ஆனால், சிவனின், இவ்வெற்றிச் செயல், நெடுஞ்செழியன் காலத்து மதுரையில், பலராலும் அறியப்பட்டிருந்தது என, உறுதியாகக் கொள்ளமுடியாது. மேலே கூறப்பட்ட இரு பொருள்களுமே, கட்டுப்பாடற்ற கற்பனைகள்தாம். ஆனால், உரையாசிரியர் நச்சினார்க்கினியரின் விளக்கம் படுமோசம். அவர். மூலச் சொற்களையும், சொற்றொடர்களையும் தாம் கூற விரும்பும் பொருளுக்கு ஏற்றவாறு இடம் மாற்றிப் போட்டுத், தென்னவன் என்ற சொல் இராவணனைக் குறிப்பதாகக் கொண்டு, அகத்தியர், தமிழ்நாட்டின் தலைமைப் பொறுப்பிலிருந்து, இராவணனை அகற்றினார் எனக் கூறுகிறார். தம் கூற்றுக்கு ஆதரவாக, தொல்காப்பிய உரையாசியர் இளம் பூரணர், அகத்தியர், இராவணனை இசையில் வென்றார் எனக்கூறுவதை எடுத்துக் காட்டுகிறார். (இராவணனைத் தமிழ் நாட்டையாளாதபடி போக்கின, கிட்டுதற்கரிய வலியினையுடைய, பழமை முதிர்ந்த, அகத்தியன் இராவணன் தென்திசையாண்டமை பற்றித் தென்னவன் என்றார் ; அகத்தியனைத், தென்திசையுயர்ந்த நொய்ம்மைபோக, இறைவனுக்குச் சீரொப்ப இருந்தான், என்பது பற்றிக் கடவுள் என்றார். இராவணன் ஆளுதல், பாயிரச் சூத்திரத்து உரையாசிரியர் கூறிய உரையானும் உணர்க". (மதுரைக்காஞ்சி 40-42, உரை) என்ற அவர் உரையினைக் காண்க: நச்சினார்க்கினியார் தரும் இப்பொருள்