பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் ... முதல் நுழைவு

329


எல்லாம், சமஸ்கிருத இலக்கிய மரபுகளால், தமிழிலக்கியத்திலிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டுவிட்ட, மக்களின் வாழ்க்கை முறை, ஆரிய ஆதிக்கத்தின் கீழ் முழுமையாகக் கொண்டுவரப்பட்டுவிட்ட, மக்களுக்கு இட்டுவழங்கிய தமிழ்ப் பெயர்களெல்லாம், சமஸ்கிருதப் பெயர்களால் இடம் கொள்ளப்பட்டுவிட்ட காலத்து நிகழ்ச்சிகளைப் பற்றியே கூறுகிறது. ஆனால், இந்தக் காப்பியமும், அகத்தியர் பற்றிய கதைகளில் ஒரு சிலவற்றையே கொண்டுளது. அவற்றுள் ஒன்று, நீர்வேட்கையுற்ற காந்தமன் என்ற சோழ மன்னன் வேண்ட, அமர முனிவனாம் அகத்தியனுடைய நீர்க் குடம் கவிழத் தோன்றிய காவிரிப் பெண்ணைக் குறிப்பிடுகிறது.

‘’கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட,
அமர முனிவன் அகத்தியன் தனா து
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை’’.

- மணிமேகலை : பதிகம். 10-12

ஸ்காந்த புராணம், இந்த வேண்டுகோள் விடுத்ததை, இந்திரனுக்கு ஏற்றுகிறது. சமஸ்கிருதத்தில், காவிரி, காவேரி என அழைக்கப்படுகிறது. காவேரி, கவேரன் என்ற முனிவன் மகளாகக் கூறப்பட்டுளது. இக்கதை, மணிமேகலையில், "தவா நீர்க் காவிரிப் பாவைதன் தாதை கவேரன்" (மலர் வனம் புக்க காதை : 55-56) 'கவேர கன்னி' (பீடிகை கண்டு. பிறப்பு உணர்ந்த காதை : 62) எனக் குறிப்பிடப்பட்டுளது. இக்கதை, ஆக்நேயபுராணத்தில் கூறபட்டிருப்பதாக, திருவாளர். டாக்டர் உ. வே. சுவாமிநாத அய்யர் அவர்கள் கூறுகிறார். (மணி: 9: 52. அடிக்குறிப்பு காண்க) மற்றொன்று, அகத்தியர் ஆணையிட, வானிடைத் தொங்கிக்கொண்டிருந்த, அசுரர்க்குரிய கோட்டையை அழித்து, அவ்வெற்றி குறித்துத் தோளில் தொடி அணிந்து. தொடித் தோள் செம்பியன் எனும் பெயர் கொண்ட சோழ மன்னன் ஒருவன், தன் தலைநகரில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருபத்தெட்டு நாட்கள் நடை பெறும் இந்திரவிழாவின்போது வந்திருக்குமாறு இந்திரனை