பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தமிழர் வரலாறு

கொண்டு, மனித இனத்தின் வளர்ச்சியில், அதிலும், அவலுடைய தொடக்கநிலை வளர்ச்சிப்பருவத்தில், ஒப்புயர்வற்ற நிலையில் துணைநிற்பதாக இருந்தும், வளங்கொழிக்கும் இந்தியதாடு, தன் மைந்தர்களின் வாழ்க்கை நிலைக்கும், தன் வரலாற்று ஏடுகளுக்குப் பெருமை சேர்க்கும் பல்வேறு நாகரீக நலத்திற்கும், தன் எல்லைக்கு அப்பாற்பட்ட வறண்ட பிறநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனவற்றையே சார்ந்திருக்கவேண்டியுளது என்பது வெள்ளிடை மலையாகும் என்றே இந்திய வரலாற்று ஆசிரியர் பலரும் கருதுவதாகத் தெரிகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள், திராவிடர்களின் மூதாதையர்களை, இந்தியாவின் வடமேற்கு அல்லது வடகிழக்குக் கணவாய்கள் வழியாக நம்பிக்கைமிக்க நல்ல வழிகாட்டிகளின் துணையோடு கொண்டுவந்து, எடுத்த எடுப்பிலேயே முழுமைபெற்ற வெளிநாட்டு நாகரீகத்தோடு காவிரி அல்லது வைகைக் கரைகளில் குடியமர்த்துகின்றனர். தமிழ்ச்சொற்களோடு ஒருசார் உறவுடைய சொற்கள் சிலவற்றை, வட இந்தியாவின் ஒரு மூலையில் வழங்கும் பிராஹிமொழி கொண்டிருப்பது ஒன்றே அவர்தம், மிகப்பெரிய இக்கற்பனைக்கு, அவர்கள் நம்பும் மிசச்சிறிய அகச்சான்று. தமிழ்மொழி அல்லது அதனோடு உறவுடைய ஒருமொழி, பண்டைக்காலத்தில், அவ் வடமேற்கு மாநிலங்கள் வரை வழக்கில் இருந்துள்ளது என்பதே இதிலிருந்து பெறக்கூடிய முறையான முடிவு ஆகும். ஒரு மொழிக்குடும்பத்தின் ஒரு மொழியின் ஒரு வாக்கியத்தொடரை, மொழியியல் மரபைச் சிறிதும் மீறாமல், அத்தொடரில் உள்ள சொல்லுக்குச் சொல் மாற்றி வழங்குவதன் மூலமே, வேற்றுமொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியின் வாக்கியத்தொடராக மொழி பெயர்த்துக் கொள்ளுவதற்கு ஏற்புடையதாகும் வகையில், வடஇந்தியாவில், இன்று வழக்கில் இருக்கும், சமஸ்கிருதம் அல்லது கெளடியன் இனத்தைச் சேர்ந்த மொழிகள் பலவும், திராவிட இன மொழிகளில் உள்ளது போன்ற இலக்கண அமைப்பு முறைகளையும், சொற்றொடர் அமைப்பு முறைகளையும் கொண்