பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள் 345·

"அறவோன் மகன்" எனும் பெயருடையான் ஒருவன் பாடப் பெற்றுள்ளான். ஆகவே, அப்பாடலாசிரியரும் பழம் புலவராக ஆக்கப்பட்டார்.]

அகப்பொருள் உரையாசிரியர் கூறும் மற்றுமொரு பொருந்தாக் கூற்று, கடைச்சங்கம் நிறுவிய பாண்டிய அரசர்களில் மூவர் புலவர்களாவர் என்பது. ஆனால், குறுந்தொகை, நெடுந்தொகை, புறநானூறு, நற்றிணை ஆகிய தொகை நூல்களில், புலவர்களாகச், சோழ அரசர் இடம் பெற்றிருப்பதைக் கணக்கில் கொள்ளாமலே, அவற்றில் புலவர்களாக இடம் பெற்றிருக்கும் பாண்டிய மரபினர், மூவர் அல்லர். ஒன்பதின்மராவர். அவர்கள் வருமாறு :

1. ஒல்லையூர்த் தந்த பூதப் பாண்டியன். - பாடிய பாடல்கள் : புறம் : 71. அகம் : 25. 2. கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி. பாடிய பாடல்கள் : புற: 102. நற்றிணை: 121. 3. பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், பாடிய பாடல்கள் : புறம் : 183. 4. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியின் : பாடிய பாடல் : புறம் : 72 5. உக்கிரப் பெருவழுதி : பாடிய பாடல்கள் : நற்றிணை : 68. அகம் 26

6. பாண்டியன் மாறன் வழுதி : பாடிய பாடல்கள் :

நற்றிணை : 67 : 301.

7. பாண்டியன் அறிவுடை நம்பி : பாடிய பாடல்கள் :

குறுந் :230 : நற் : 15 அகம் 373 8. பாண்டியன் பன்னாடு தந்தான் : பாடிய பாடல் குறுந் : 270