பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348

தமிழர் வரலாறு

போது, எந்த ஒரு பாட்டேனும், எந்தக் காலத்திலாயினும், புலவர் குழாம் முன், திறனாய்வுக்காகப் பாடப்பட்டதா ? ஆம். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கான, நம்பத்தகுந்த அகச்சான்று ஒன்று உளது. தொல்காப்பியனார், தம்முடைய புகழ்மிக்க இலக்கண நூல் இயற்றியபோது, அவர், அதை, நிலந்தரு திருவின்

பாண்டியன் அவையில் படித்துக் காட்டினார். அப்போது, அறம் போதிக்கும் நான்கு வேதங்களில் வல்லவரான, அதங்கோடு என்ற ஊரினரான, ஒரு பார்ப்பன ஆசிரியர், அந்நூலைத் திறனாய்வு செய்தார். இது, தொல்காப்பியத்திற்கு 

முன்னுரையாம் பாயிரத்தைப் பாடிய. தொல்காப்பியனாரின் நண்பரும், ஒரு சாலை மாணவருமாகிய பனம்பாரனாரால் உறுதி செய்யப்பட்டுளது.

"நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து அறம்கரை நாவின், நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து"

-தொல்காப்பியம்:பாயிரம்:1-9-11

(இந்த அரசன், நெடுஞ்செழியன் புகழ்பாடும் மதுரைக் காஞ்சியில் (60.61)நிலம் தந்த பேருதவிப்பொலந்தார் மார்பிள் நெடியோன்" எனக் கூறப்பட்டுள்ளான். சிலப்பதிகார உரையாசிரியர், அடியார்க்கு நல்லார், "அவருள் கவியரங் கேறினார் எழுவர் பாண்டியருள், ஒருவன் சயமாகீர்த்தி யனாகிய நிலம்தருதிருவின் பாண்டியன், தொல்காப்பியம் புலப்படுத்து இரீஇயினான்' (சிலம்பு : வேனில்காதை : 1 - 2) எனக் கூறி இருக்கவும், மதுரைக்காஞ்சி ஆசிரியர் நச்சினார்க்கினியர், அத்தொடருக்கு நாட்டில் இருக்கின்ற அரசர் நிலங்களை எல்லாம் கொண்ட பெரிய உதவியையும், பொன்னால் செய்த தாரை அணிந்த மார்பினையும் உடைய வடிம்பலம்ப நின்ற பாண்டியன்’ என வேறு பொருள் விரித்துள்ளார்.]