பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள் 349·

முழுக்க முழுக்க நம்புதற்குரிய இச்செய்தியோடு, தொல்காப்பிய அரங்கேற்றம் நிகழும்போது, அரசவைக்கு வருமாறு அதங்கோட்டாசானைத், தொல்காப்பியனார் பலமுறை அடுத்தடுத்து வேண்டிக்கொண்டார். ஆனால், அகத்தியனார் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று தடுத்து விட்டார். சமரச ஏற்பாடாக, அதங்கோட்டாசான் அந்நிகழ்ச்சியில் ஒருவகைக் கொடுமையின் வழக்கறிஞராகப் பங்கு கொண்டு, தொல்காப்பியத்தின் மீது குற்றம்காண் திறனாய்வினைச் செய்தார். ஆனால், தொல்காப்பியனார், தம் நிலையில் உறுதியாக நின்று, கூறிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் தகர்த்து எறிந்தால் என்ற கட்டுக்

கதையையும் இணைத்துவிட்டார். இக்கதை, அப்பாயிரத்தில் காணலாம். 'அரில்தப' அதாவது குற்றம் திர' என்ற தொடரை விளக்குவதற்காகவே, புனையப் பட்டது. அரசவை இருந்த அரசன் மாகீர்த்தி என்றும், அவன் 24000 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என்பதையும் நச்சினார்க்கு இனியர் இணைத்துள்ளார். ஆனால், ஐந்தாம் நூற்றாண்டில், உக்கிரப் பெருவழுதியின் காலம்வரை, பாண்டிய, சோழ, சேர அரசர்களில், எவரேனும் வடமொழிப் பெயரோ, அல்லது பட்டமோ பெற்றிருந்தனர் என அறிவிக்கும் நிகழ்ச்சி எதுவும் பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை. ஆகவே மாகீர்த்தி என்ற அப்பெயர் அல்லது பட்டம், பிற்காலக் கண்டுபிடிப்பாகும். இது ஒரு நிகழ்ச்சி தவிர்த்து, ஒரு பழந்தமிழ் இலக்கியம் அல்லது ஒர் இலக்கணம், ஒர் அரசவையில் முறையாக அரங்கேற்றம் பெற்றுத் திறனாய்வு செய்யப்பட்டதான நிகழ்ச்சி எதுவும் இல்லை; பல்வகைப்பட்ட அனைத்துப் பொருள்களையும் குறித்துக் காலத்திற்கேற்பப் பாடப்பெற்ற சிறுசிறு பாடல்கள், இவ்வாறு அரங்கேற்றம் செய்யப்பட்டன என்பது எள்ளி நகையாடற்குரித்து.

எட்டுத் தொகை நூல்களை உருவாக்கிய, இரண்டாயிரத் திற்குச் சற்றுக் கூடுதலான செய்யுள்களில், கவிஞர்கள் அல்லது புலவர்கள் இடம் பெற்றிருந்த சங்கங்கள், தொடர்ந்து இருந்து