பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

351


தற்கான காரணம் எதுவும் இல்லை. அம்மரபின் இலாஞ்சனை மீன் என்பதன் பொருள் ; அவர்கள், தொடக்கத்தில் மீனவக் கடலோடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதே, மேலும், வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே, தென் இந்தியக் கடல் வாணிகத்தில் கருத்துக் கொண்டிருந்த நாடு, பாண்டி நாடு, ஆகவே, அவர்தம் முதல் தலைநகர், கடலில் இடம் கொண்ட மதுரை ஆதலும், அம்மதுரை, "கடல் கொண்ட மதுரை" ஆதலும் ஏற்புடையதே, "கடல் கொண்ட" என்ற அச்சிறப்புத் தொடரிலிருந்து அது, ஒரு துறைமுக நகர் ; பெரும்பாலும், தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரையின் தென்கோடியில் இடம் பெற்றிருந்தது. அக்கடற்கரை. ஆங்கு. அடிக்கடி நிகழும் கடல் கோள்களுக்கு ஆட்பட்டிருந்தமையால், அந்நகர் கடலால் அழிக்கப்பட்டிருக்கும் என்ற உண்மைகளை ஊகித்து உணரலாம். உரையாசிரியர் ' "அக்காலை போலும், பாண்டி நாடு கடல் கோளால் அழிவுற்றுப் போனது" எனப் பொதுவாகத் தெளிவின்றிக் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சி பற்றிய, தெளிவில்லாத, ஒரு செவிவழிச்செய்தியை அவர் கேட்டிருக்கக் கூடும் ; அதுவே, அது எப்போது நடைபெற்றது. என் பதில் தெளிவற்றிருக்கவும் வேண்டும். பழந்தமிழ். இலக்கியத்தில், இயற்கை விளைவித்த இப்பேரழிவு பற்றிய ஒரு குறிப்பு உளது. கவித் தொகையில் நான்காவதாகிய முல்லைக் கலியில், "அலை ஒயாப்பெருங்கடல், தன் நாட்டைக் கவர்ந்துகொள்ளவும், தளர்ந்துவிடாமல் பகைவர் நாடுகளைக் கைக்கொண்டு ஆங்கிருந்த புலி, வில் இலாஞ்சனைகளைத் தன் ஆற்றலால் அகற்றிவிட்டுத், தன் மீன் இலாஞ்சனையைப் பொறித்து அழியாப் புகழ்கொண்ட தென்னவன்" என்று: கூறப்பட்டுளது.

"மவிதிரை ஊர்ந்து, தன் மண் கடல்வெளவலின்,
மெலிவின்றி, மேற்சென்று மேவார் நாடு இடம்படப்,
புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்"

-கலித்தொகை : 104 : 1-4