பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

தமிழர் வரலாறு

சிலப்பதிகாரமும் அந்நிகழ்ச்சியைக் கூறுகிறது. அது, இது தன் நாட்டு எல்லை இதுதான் என்பதைப் பகையரசர்க்கு உணர்த்த, தன் மீது வேல் எறிந்த அப்பழம் பகைக்குப் பழிவாங்குவான் வேண்டி, கொடிய கடல், (உரையாசிரியர், கொடுங்கடல் என்பதற்கு வளைந்த கடல் எனப் பொருள் கொண்டுள்ளார்). பஃறுளி ஆற்றையும், பலமலை அடுக்குகளையும் கொண்ட குமரி மலையை அழித்து விடவே, வடநாட்டுக் கங்கையையும், இமயத்தையும் வெற்றி கொண்டு தென்னகத்தை ஆண்டு வந்த தென்னவன் வாழ்வானாக!

"அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி,
வடிவேல் எறிந்த வான்பகை பொறாஅது,
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள,
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி"

சிலப்பதிகாரம் : 11:17-22.

பாண்டியன், சோழ, சேர அரசர்களை வென்ற தன் நாட்டின் இழப்பிற்கு ஈடு செய்துகொண்டான் எனக் கலித்தொகை கூறியிருக்க, சிலப்பதிகாரம், கங்கை பாயும் நாட்டையும் இமயத்தையும் கொண்டானாகக் கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார், வேறு ஒரு பகுதிக்கு உரை விளக்கம் அளிக்கும்போது, “நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டு இரீயினார், காய்சின வழுதி முதல், கடுங்கோன் ஈறாயுள்ளார் எண்பத்தொன் பதின்மர். அவருள் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள், ஒருவன் சயமாகீர்த்தியனாகிய நிலந்தரு திருவின் பாண்டியன்; தொல்காப்பியப் புலப்படுத்துஇரீயினான். அக்காலத்து. அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும், குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே,[“குமாரீ