பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

353

நதீ” ஒன்றை மகா பாரதம் குறிப்பிடுகிறது: மகாபாரதம் : 9:36]:“எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானென மலிந்த, ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகரை நாடும், ஏழ்குறும்பனை நாடும், என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும் நதியும் பதியும் தட நீர்க்குமரி வட பெருங் கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலால்” என்ற மரபு வழிச் செய்தியை அளித்துள்ளார். (சிலப்பதிகாரம் காதை 8 : 1-2) [ஏழு என்ற சொல், பெரும் உாலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிற்றுார்களைக் குறிக்கும். நாடு என்ற சொல் குறிக்கும் பலபொருள்களில், சிற்றுார் என்பதும் ஒன்று. இழந்த நாட்டின் நீளம், எழுநூறு காவதம், அதாவது ஆயிரம் மைல் என்கிறார் அடியார்க்கு நல்வார். அது, பொறுக்கலாகா மிகைப்படக் கூறலாம். மாறாக, அது உண்மையாயின், இழப்பீடாக, அப்புலவர் கூறுவதுபோல், வடநாடு முழுமையும் இணைத்துக்கொள்ள, பாண்டியன், உறுதியாக உரிமையுடையவனே!] குமரி பஃஃளி இரண்டும் கடல் நோக்கி ஓடும் இரு சிறு மலை அருவிகளாதல் கூடும். அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட சிறிய கடற்கரை நிலப்பகுதி கடல்கோளால் மறைந்துபோயிருக்கக் கூடும். தொல்காப்பிய உரையாசிரியர்களில் ஒருவராகிய பேராசிரியர், இம்மாவட்டம் பனைநாடு-பனைமரங்கள் மலிந்த நாடு-என அழைக்கப்பெறும் என்கிறார். (தொ. பொருள் : 94 உரை) ஆகக் கடலால் கொள்ளப்பட்டது பண்டைக் காலத்தில் பாண்டியர்க்குரித்தாயிருந்த பகுதியைத் தெற்கில் கொண்டிருந்ததான இன்றைய திரு வாங்கூர் நாட்டின் சிறுநிலப்பகுதியே ஆகும். நூலாசிரியர், கங்கை இமய வெற்றிகளைப் பாண்டியனுக்கு உரிமையாக்கும், மேலே எடுத்துக்காட்டிய, அம் மூலவரிகளுக்கான தம் உரையில் அடியார்க்கு நல்லார், “அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழ நாட்டெல்லையிலே முத்துார்க் கூற்றமும், சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமும் என்னும் இவற்றை இழந்த நாட்டிற்காக ஆண்ட தென்னவன்”

த வ - 23