பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

355

சங்கம் பற்றிய மற்றுமொரு கட்டுக்கதை :

கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில், சைவ, வைஷ்ணவ, சைன, பெளத்தங்களாகிய வடநாட்டு ஆகம வழிபாட்டு நெறிகள், வடநாட்டு வழிபாட்டு நெறிகளைப் பின்பற்றுவோர் வாழ்க்கை முறையிலிருந்து, தமிழர்களின் எளிய வாழ்க்கை நெறிகளை வேறு பிரித்துக்காட்டியிருந்த தடையை உடைத்துத்கொண்டு, சோழ, சேர, பாண்டிய நாடுகளுள் நுழைந்துவிட்டன. இதற்கான காரணம் பின்னர் விவாதிக்கப்படும். சிவ, விஷ்ணு வழிபாட்டாளர்களும், சைன, பெளத்த சமயங்களின் பிக்குகளும் மோஷத்திற்கு வழி காணுங்கள் எனத் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தவாறே, தழிழ்நாட்டில் வந்து குழுமி விட்டனர். சிவனை வழிபடுவோர், சிவனடியார் அல்லது நாயன்மார் என்றும், விஷ்ணுவை வழிபடுவார் 'ஆழ்வார்' என்றும் அழைக்கப்பட்டனர்; தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும், அடியார்களும், ஆழ்வார்களும் வழிபட்ட இடங்களிலெல்லாம் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் எண்ணற்ற கோயில்கள் எழுந்தன. வழிபாட்டாளரின் பக்தியின் அளவிற்கேற்ப பல அற்புதங்கள் செய்து காட்டப்பட்டன. ஒவ்வொரு திருக்கோயிலும், தத்தம் தெய்வீகத்தன்மையின் சிறப்பை நிலை நாட்ட எண்ணற்ற கட்டுக்கதைகளைக் கட்டிவிட்டன. இவ்வாறு கட்டுக்கதைகளைக் கட்டிவிடுவது, இன்றும் தொடர்ந்து நடை பெறும் வழிக்காகிவிட்டது. ஒரு கட்டுக்கதைக்குரிய கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனுடைய பக்தனாக ஒரு புலவர் ஆகிவிட்டால், அக்கட்டுக் கதை, இலக்கிய வடிவமும் பெற்றுவிடும். இக்கதைகளைக் கூறும் பாக்கள், பொதுவாக, சமஸ்கிருதத்தில் புனையப்பட்டு ஸ்தல புராணங்கள் என அழைக்கப்பட்டுப், பிற்காலத்தில் தமிழில் எழுதப்பட்டுவிடும். இந்த ஸ்தலபுராணங்களின் உணர்ச்சி பூர்வமான நோக்கமெல்லாம். உள்நாட்டுப் பற்றும், குறிப்பிட்ட கடவுளின் அற்புதச் செயலைப் பெரிதுபடுத்தத் துடிக்கும் கட்டுக்கடங்கா, ஆர்வமுமேயாதலின், அத்தல