பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

தமிழர் வரலாறு

புராணங்கள், வியாச புராணம் போல, வரலாற்றுச் செய்திகளைக் கொண்டிருக்கவில்லை.

மதுரைப் பெருங்கோயிலில் இடம் கொண்டிருக்கும் சிவன் செய்த அற்புதச்செயல்கள், திருவிளையாடல்கள் என அழைக்கப்பட்டன. அப்பொருள் பற்றிய சமஸ்கிருத நூல்கள் இரண்டும், தமிழ் நூல்கள் இரண்டும் உள்ளன. இந்நூல்கள் மிகமிகப் பிற்பட்ட காலத்தே எழுதப்பட்டன என்றாலும், அவை, ஆறாம் நூற்றாண்டில் எழுந்த கட்டுத் கதைகளையெல்லாம் தம்முள்ளே கொண்டு, பனிமூட்டம் போலப் பருத்துக்கொண்டே செல்கின்றன. மதுரை மன்னர்கள் சிலரை அக்கதைகளில் கூறுவதன் மூலம், அக்கதைகளுக்கு ஒரு போலி வரலாற்று வடிவம் கொடுக்கப்பட்டுளது: பாண்டிய அரசர்களில், கடைசி அரசனாகிய உக்கிர பாண்டியனைத்தவிர்த்து, பழைய பாண்டிய அரசர் எவர்க்கும் தமிழ்ப் பெயர் தவிர்த்து வேறு மொழிப்பெயர் இல்லை, ஆகவே, அப்புராணங்களில் வரும் அரசர்களுக்குச் சமஸ்கிருதப் பெயரே கொடுக்கப்பட்டிருப்பது, அப்பெயர்களெல்லாம் கற்பனைப் பெயர்களே என்பதை உணர்த்துகிறது. அக்கதைகளுள் ஒன்று பின்வருமாறு கூறுகிறது : வங்கிய சேகரன்.(சமஸ்கிருத வம்ச சேகரர்) ஆட்சிக் காலத்தில், காசி நகரத்தில், பிரம்மதேவன், தன் மனைவி சரஸ்வதியோடு சினம் கொண்டு, அவள் உடலை உருவாக்கிய ஐம்பத்தோரு சமஸ்கிருத எழுத்துக்களில், 'ஆ' முதல் ஹ ஈறாக உள்ள நாற்பத்தெட்டு எழுத்துக்கள், மனித உருவம் கொண்டு. புலவர்கள் ஆக, ஏனைய எழுத்துக்களின் உயிர்ப்பொருளும், மதுரைக்கடவுளுமான முதல் எழுத்தாம் அ, மனித உருவம் கொண்டு புலவனும் ஆகி, ஏனைய நாற்பத்தெண்மரோடு கூடி, தமக்குள்ளே நாற்பத்தொன்பது பேர் கொண்ட சங்கத்தை உருவாக்குமாறு ஆணையிட்டார். நாற்பத்தெட்டு எழுத்துக்களும் மண்ணுலகில் மக்களாகப் பிறந்து, பல்வேறு இடங்களில், அறிவார்ந்த வாதங்களைச் செய்து, இறுதியில் மதுரை சென்றடைந்தனர். அவர்முன், சிவன், தன் உண்மை வடிவில் தோன்றி, மதுரைக் கடவுளை வழிபடுமாறு