பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358

தமிழர் வரலாறு

விளைவாகச், சிவனடியார்கள், இந்த ஒரு சங்கம் பற்றியே பேசுகிறார்கள் என்றால், அது, நம்மை வியப்பில் ஆழ்த்தாது. தேவாரத்திருமுறைகளில், கி. பி. ஏழாம் நூற்றாண்டில் அப்பர் பாடிய ஒரு பாட்டில், தருமி என்ற ஏழைப் புலவன், சங்கத்தாரிடம் பொற்கிழி பெறச் சிவன் துணை புரிந்த திருவிளையாடல் குறிப்பிடப்பட்டுளது.

["நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி
நற்கனகக் கிழி தரு மிக்கு அருளினோன் காண்
- திருப்புத்துார்த் திருத்தாண்டகம் : 2 : 2]

இத்திருவிளையாடல்பற்றியகதை, கி.பி.ஏழாம் நூற்றாண்டில், பெரிதும் பேசப்பட்டு வந்தளது [இப்பாட்டில் விளக்கப்பட்டிருக்கும் மற்றொரு திருவிளையாடல், அகத்தியனார்க்குச், சிவன் தமிழறிவித்ததாகும். இக்கதை எப்போது கொண்டுவரப் பட்டது என்பதை நம்மால் உறுதியாக அறிய இயலாது. ஆனால், மக்களில் ஒருவரான, அகத்தியத்தின் ஆசிரியர், முதன் முதலாக, இறைத் தன்மை வாய்ந்தவராக மாறியுள்ளார்.] ஆனால், இன்றைய திறனாய்வாளர்கள் எனக் கூறிக்கொள்வார், ஒரே சங்கம் குறித்துப்பேசுவது உண்மையில் வியப்பிற்குரியதாம். அகப்பொருள் உரையாசிரியர் கூற்று ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்லது ஏற்றுக்கொள்ளத்தகாதது என்பது குறித்து அவரவர் கொள்ளும் முடிவிற்கு ஏற்ப, அவர்கள், ஒன்று முச்சங்கங்கள் பற்றிப் பேச வேண்டும் அல்லது அத்தகைய சங்கம் எதுவுமே இல்லை எனப் பேச வேண்டும். திறனாய்வு முறை, உண்மையும் கற்பனையும் கலந்த உரையாசிரியர் கூற்றை விடுத்து, ஸ்தல புராணங்களின், கலப்படமற்ற வெற்றுப் புனைந்துரைகளை ஏற்குமாறு கொண்டுசெல்வது, உண்மையில், வியத்தகு புதுமையாக உளது.

சங்கம் என்ற சொல்லும், அதன் சொல்லுருபுகளும் :

சங்கம் என்ற சொல், ஜைனர்களாலும், பெளத்தர்களாலும், மக்களிடையே பழக்கப்படுத்தப்பட்ட, 'சங்க்ஹ'