பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360

தமிழர் வரலாறு

தவப் பள்ளித் தாழ்காவின் -பட்டினப்பாலை : 53.

"பூவும் புகையும் சாவகர் பழிச்சச்,
சென்ற காலமும் வரூஉம் சமயமும்
இன்று இவன் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து
வானும் நிலனும் தாம்முழு துணரும்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை
ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்,
கல்பொளிந் தன்ன இட்டுவாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக்
கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந்து ஓங்கி
இறும்பூது சான்ற நறும் பூஞ் சேக்கையும்'

--மதுரைக் காஞ்சி : 476 - 488

ஒரு ஜைன சங்கம், தமிழ் நாட்டில், மதுரையில், கி.பி. 470இல் முதன் முதலாக நிறுவப்பட்டது. அனில்வாட் பாதன் என்பவரிடமிருந்து (Annilwad Pathan) பெறப்பட்ட 'திகம்பர தர்ஸன சாரம்’ என்ற நூலில், தம்முடைய காலம் 909 (அந்நூற்றாண்டுத் தொகுப்பை அவர் பரவலாக ஆள்வதிலிருந்து சம்வத் 909, கி.பி. 853 க்கு நிகராகக்கூடும்) என்று கூறிக்கொள்ளும் தேவசேனன் என்பார், ஶ்ரீ பூஜ்யபாதர் மாணவராகிய வஜ்ஜிர நந்தி, தக்கண மதுரையில் 525 இல் திராவிட சங்கத்தைத் தொடங்கினார் என நமக்கு அறிவிக் கிறார்.

["ஶ்ரீ பும் ஜ பாதசீசோ தாவிட சங்கஸ் காரகோ
வுஸ்ட்ஹோ
நாமென வஜ்ஜிரநந்தி பாஹுன வெதீ மகாசத் தொ | |
பம்கச கவீணா விக்ரமராயச மரண பட்டஸ/
தரிசன மகுராஜாடொ தாவிட சம்கொ மஹாமஹெ //

—Journal of the Bombay Branch of Royal Society: Vol. 17 : Part: 1; No.: ; XLVI: Page : 74.]