பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362

தமிழர் வரலாறு

வகையில், தொடர்புடைய, இறையனார், உருத்திரர், கபிலர், நக்கீரர். பரணர், மதுரைப் பேராலவாயர் போலும் ஒரு சில புலவர்கனை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டதாகத் திருவிளையாடல் புராணத்தில் விளக்கிக் கூறப்படும். சங்கம் போன்ற, தன்னைப் பற்றிய வழிபாட்டுப் பாடல்களைப் பாடும் அறிஞர்களும் புலவர்களும் கொண்ட சிவன், தானே தலைமை தாங்கும் ஒரு சங்கம் பற்றிய கட்டுக்கதை ஒன்றும் எழுந்தது. இவ்வாறு சங்கம் என்ற சொல், தமிழில் முதன் முதலில், சமயச் சார்புடைய அவைக்கு வழங்கப்பட்டது. அதன் செயல், தர்மோபதேசம் செய்தல் அல்லது சிவனைப் பாடுதல் ஆகும். முச்சங்கம் பற்றிய, தம்முடைய கட்டுக்கதையில், இறையனார் அகப்பொருள் உரையாசிரியர், சங்கம் என்ற இச்சொல்லை, முதன் முறையாக வெறும் இலக்கிய மன்றமாகக் குறிப்பிட்டுள்ளார்.

சங்கம் என்ற சொல்லை, ஒர் உறுப்பாகக் கொண்ட முதற் சொற்றொடர்கள், “சங்க மலி தமிழ்” “சங்கமுகத் தமிழ்,” “சங்கத் தமிழ்” என்பன்வாம். இச்சொற்றொடர்களில் வரும் தமிழ் எனும் சொல், உணர்த்தும் பொருள், தமிழ்ச் செய்யுள் என்பதாம். தமிழ்மொழி என்பதன்று. சங்கம் எனும் சொல், சிவனை அல்லது விஷ்ணுவைப் பாக்கள் பாடிப் பரவுவோனின் குழு, அல்லது தெய்வப் பாடல்களோடு கலந்துவிட்டவர் குழு எனும் பருப்பொருள் உடையதாம்.

பெருமைமிகு, பிராமணச் சைவத் தேவாரப் யராகிய திருஞானசம்பந்தர், திருத்தேவூர் இறைவனைப் பாடிய தம்முடைய பாடல்கள் பத்தையும் ஞானசம்பந்தனால் பாடப்பெற்ற சங்கத்தோடு உறவுடைய பத்துப் பாடல்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். “ஞானசம்பந்தன் உரை செய் சங்கம் மலி செந்தமிழ்கள் பத்து” (திருத்தேவூர் தேவாரம் : 10,11 : 3 : 4)

அதே கடவுள் மீதான மற்றொரு தேவாரத்தில், நல்ல செந்தமிழ்ப் பாக்கள் பாடவல்லவன், எனத் தம்மை