பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

363

அழைத்துக்கொள்கிறார். “நல்ல செந்தமிழ் வல்லவன்” திருத்தேவூர் தேவராம்:10:1-2)

திருஞான சம்பந்தரோடு சமகாலத்தவராய, வைஷ்ணவப் பாடலாசிரியர் திருமங்கை ஆழ்வார். தம்முடைய பதிகம் ஒவ்வொன்றையும், செந்தமிழில் பாடப்பெற்ற பாடல்கள் என்ற புகழுரையோடு முடிக்கிறார். சில பதிகங்களில் சங்கத் தலைமைக்குச் சூட்டும் பத்துப் பாக்களால் ஆன மாலை என அழைக்கிறார். “சங்கமுகத் தமிழ் மாலை பத்து.” (பெரிய திருமொழி : 3 : 4 : 10).

மற்றொன்றில் சங்கத்திற்குரிய, தமிழில் ஆன பாக்கள் பத்து என அழைக்கிறார். “சங்கமலி தமிழ்மாலை பத்து” (பெரிய திருமொழி : 3 : 9 - 10) பெருமைமிகு வைஷ்ணவப் பெண்பாற்புலவர், பெரியாழ்வார் மகள், ஆண்டாள். தம்முடைய இனிய திருப்பாவைப் பாடல்களைப் “பட்டர் மகள் கோதை பாடிய முப்பது சங்கத் தமிழ்ப் பாக்களால் ஆன மாலை” என அழைக்கிறார். “பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பது”. (திருப்பாவை : 30, 1, 5)

தமிழ் வரலாறு எழுதும் இன்றைய எழுத்தாளர்களிடையே பெருவழக்காக வழங்கப்படும் சொற்றொடர், “சங்க காலம்” என்பது எந்த ஒரு தனிப் புலவர் மன்றமும், “சங்கம்” என அழைக்கப்படவில்லை என்பதைக் காண, சங்க காலம் என்ற அத்தொடர் பொருளற்றதாகிறது. இறையனார் அகப்பொருள் உரையாசிரியரின் கருத்துப்படி சங்க காலம் என்பது, 9900 ஆண்டுகளைக் கொண்டது: இன்றைய எழுத்தாளர் சிலர், இந்த எண்ணைத் தூக்கி எறிந்து விட்டு, முதல் இரண்டு சங்கங்களைச் சேர்ந்தனவாகக் கூறப்படும், பல்வேறு இலக்கண இலக்கியங்களின் ஆசிரியர்களைச் சிறிதும் நியாயம் இல்லாமல் இல்லாதவர்களாக்கித் துரத்திவிட்டுச் சங்கம் என்ற சொல்லை, மூன்றாம் சங்கத்தை மட்டுமே குறிக்கும் நிலையில் வரையறுத்து, அச்சங்க காலம் எது என அவர்கள் கற்பனை செய்துகொண்டார்களோ